பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fled to return frof, urltil 11tan shall know' That they alone can give the bliss Vvarthy 4 soul tixat clairms its kindred with eternity), இந்தச் செல்வத்தின் வளர்ச்சியால் வாணிபம் பேலோங்கி, மனித குலத்தின் அன்பையே விஷப்படுத்தி, செல்வத்தின் சாபமும் அத்துடன் வறுமையின் சாபமும் உலகில் நிலவ இடம் ஏற்பட்டுவிட்டதாக ஷெல்லி கூறுகிறான். அகாதமான இடைவெளி கொண்ட பொருளாதார வேற்று மையால் பஞ்சமும், நோயும், பால்ய மரணமும் அதிகரித்த தோடு, மனிதனின் ஆத்மாவும் உடலும் கறைபட்டு, விஷப் பட்டுப் போனதாகவும் அவன் கருதுகிறான். வர்த்தகத்தின் தன்மையையும் அதனால் விளைந்த தீங்கையும் பற்றி விரிவாக எழுதியுள்ள ஷெல்லியின் வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கு 16ார்ப்போம்: * *லர்த்தகமானது சுயநலத்தின் முத்திரையை, 87ல்லாவற்றையும் அடிமை கொள்ளும் அதன் சக்தியின் ராஜ முத்திரையை, ஒரு பளிச்சிடும் கனிப்பொருளின் மீது பதித்துள்ளது; அதனைத் தங்கம் என்று அழைத்தது. அந்தத் தங்க வடிவத்தின் முன்னால், கொச்சைப்பட்ட பெரிய மனிதர் களும், வெற்றாடம்பரமான செல்வந்தர்களும், பரிதாபத்துக் குரிய கர்வசுதாரர்களும், விவசாயிகளின் பெருங்கூட்டமும், பிரபுக்களும், மதகுருக்களும், மன்னர்களும் வணங்குகிறார் கள்; மே லும் தம்மையே துயரத்தின் புழுதியோடு புழுதியாய் அரைத்து நொறுக்கும் அந்தச் சக்திக்கு, குருட்டுத்தனமான உணர்ச்சிகளோடு மரியாதை செலுத்துகிறார்கள். ஆனால், அவர்களது கைக்கூலி இதயங்களின் ஆலயத்துக்குள்ளோ , தங்க மா னது ஓர் உயிருள்ள கடவுளாக வீற்றிருக்கின்றது; தர்மத்தைத் தவிர, எல்லாப் பூமண்டல விஷயங்களின்மீதும் அது ஏளனத்தோடு ஆட்சி புரிகிறது ("ராணி மாப்', படலம் 5, வரிகள் 53-63): {{Coxrnmerce has set the mark of selfishness, The signet of it.s all-enslaving power Upon a shining Ord, and called it gold Before whose image bow the vulgar great, ' 80