பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லி மன்னர்களையும், மதக்குரவர்களை யும் முற்ற கவே மதிக்க மறுக்கிறான். ஆனால் பாரதியோ மதக்குரவர் களைப் பொறுத்தவரையில் போலிகளையும் பொய்யர்களையும் மட்டுமே மதிக்க மறுக்கிறான். எனவேதான் இளமையிலேயே ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்ட பாரதி 26-11-1906-ல், தனது இருபத்திநாலாவது வயதில் எழுதிய ஒரு பாடலில் (சுட்ச்டராம தீட்சதர் பற்றிய இரங்கற்பா), மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரலர் தங்களையும் வணங்க லாதேன் {விருத்தம் 3) என்று தன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கிறான்; இந்தக் கூற்றே ஷெல்லியின் குரல்போல் நமக்கு ஒலிக்கின்றது எனலாம். பொருளும், போரும் மன்னர், மதகுரு ஆகியவர்களின் மேலாதிக்கத்தை. எதிர்த்த ஷெல்லி, அவர்களது நாடு பிடிக்கும் வெறியையும், 4.சணம் திரட்டும் பேராசையையும் எதிர்த்துக் கண்டனம் செய்தான். மனித குலத்தின் வளர்ச்சியைப் பற்றி எழுதி வரும்போது, செல்வம்தான் மனித குலத்துக்குச் சாயமாக வந்தது எனக் கூறுகிறான்; ஆனால், மனிதனின்மீது படிந்த சாபமான செல்வம், அதன் (உலகின்) வளத்தை மொட்டி லேயே கருகச் செய்தது. தர்மம், ஞானம், சத்தியம், சுதந்திரம் ஆகியவை தாம், நிரந்தரத்துவத்தோடு உறவுரிமை கொண்டாடும் தகுதி கொண்ட ஓர் ஆத்மாவுக்கு . ஆனந் தத்தை வழங்கக் கூடும் என்பதை மனிதன் அறியாதவரை யிலும், அவை திரும்பி வராமலே பறந்தோடி விட்டன* * ("ராணி மாப்', படலம் 2, வரிகள் 204-210): (But wealth, that curse of imman Blighted the bud of its prosperity: Virtue and wisdom, truth and liberty,