பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்திருக்கிறது. மாருத சாபம். இறங்காத விஷம். அதன் பெயர் பணம். இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் தூண்டிவிடுவது விருப்பம், அதாவது ருசி நீங்கிய விருப்பம்: அறிவற்ற விருப்பம்... இதனைப் போலவே ஆதிக்க வெறியாலும், பேராசை பாலும் விளைகின்ற போரையும் பாரதி கண்டித்தாள், அவனது வசனப் பகுதியில், அவன் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த மகா யுத்தத்தின் (1914-18) போது அதில் நேர்ந்த உயிர்ச்சேதம் பற்றி அவன் வருந்தியதுண்டு. இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக முடிகிறர் களே என்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஓரே வகுப்பு. சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஒருயிர்' என்று அவன் 'தமிழ்நாட்டின் விழிப்பு' (கட்டுரைகள்-மாதர்} என்ற கட்டுரையில் எழுதியுள்ளான். இதேபோல் “செல்வம் (2)'. (கட்டுரைகள் சமூகம்) என்ற கட்டுரையில் போரானது பேராசையாலும் வெறியாலும்தான் ஏற்படுகின்றது என்ற கருத்தையும் அவன் பின்வருமாறு வெளியிடுகிறான்:

  • 'பிறருடைமையைத் தாம் அபகரித்து வாழவேண்டும்

என்கிற கெட்ட எண்ணமுடையவர்களும், சர்வ ஜனங்களும் சமான செளகர்யங்களுடன் வாழவேண்டும் என்ற கருத்து இல்லாத பாவிகளும், தம்முடைய கொள்ளை விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, வாள், பீரங்கி, துப்பாக்கி களால் அநேகரைக் கொலை செய்தும், ஊர்களையும், வீடு களையும் அநியாயங்கள் செய்வது நமக்கு அர்த்தமாகக்கூடிய விஷயம், இத்தகைய கருத்துக்களைப் பாரதியின் வசனப் பகுதியில் நாம் பரக்கக் காணமுடிகிறது. , தனது கவிதைகளிலும் பாரதி போர்வெறியை இகழ்ந் தான்; கண்டித்தான். போர்வழியை, “'பெருங்கொலை வழியாம் போர்வழி என்று தனது 'மகாத்மா காந்தி பஞ்சகத்தில் குறிப்பிடுகிறான். எனவே தான் ஆதிக்க 85