பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையலாதேன் முதலாகப் பல தனது பதினெட்டால் நாஸ்திகமும் மதமும் ஷெல்லி ஆக்ஸ்போர்டில் படிக்கப் புகுந்த காலத்திலேயே! தான் வெளியிட்ட நூலின் மூலமாகத் தன்னை நாஸ்திக னென்று பிரகடனப்படுத்திக் கொண்டான் என முன்னர் பார்த்தோம். அதேபோல், அவன் தனது பதினெட்டாவது வயதில், முதன் முதலாகப் படைத்த பெருங்கவிதைப் படையலான 'ராணி மாப்' என்ற நூலிலும் நாஸ்திகக் கருத்துக்களை வெளியிட்டான். அவன் வில்லியம் காட்வின் என்பவர் எழுதிய “ அரசியல் நீதி முதலிய நூல்களைப் படித்து, இளமையிலேயே அவரிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டான் என்றும் மு ன் ன ர் பார்த்தோம். பிரெய்ல்ஸ்போர்டு (Shelley, Godwin and Their Circle) தமது நூலில் குறிப் பிடுவது போல் காட்வினுக்கு, கடவுளும் சிம்மாசனத்தை விட்டு இறக்கப்பட வேண்டிய ஒரு கொடுங்கோலனாகத் தான் இருந்தான். எனவே காட்வினிடம் ஈடுபாடு கொண்ட ஷெல்லி தனது முதற் புரட்சிப் படையலில் மன்னர்கள், மதகுருக்கள் ஆகியவர்களோடு கடவுளையும் டோக்கிவிட வேண்டும் என்றே விரும்பினான். தனது 'ராணி மாபீல் மனிதனின் கர்வம் தனது அறியாமையை மூடி மறைப்பதற்காகவே கடவுளின் திருநாமங்களைத் திறமையோடு கண்டறிந்ததாக ஷெல்லி கூறுகிறான். அதில் கடவுளைப் பற்றிய தனது கருத்துக்களைக் கூறத்தொடங்கும் போதே “'கடவுள் இல்லை ! ('There is no God') என்ற உறுதியோடுதான் அவன் பேசத் தொடங்குகிறான். மேலும் அவள் கடவுளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்:

    • கடவுளின் நாமம் புனிதத்துவத்தின் பேரால் எல்லாக்

குற்றங்களையும் வேலியிட்டுக் காக்கின்றது; அவரே அவரை வணங்குபவர்கள் படைத்துவிட்ட படைப்புத்தான்; அதற் கேற்ப, சிவா, புத்தா, பாவா, யெகோவா , கடவுள் அல்லது ஆண்டவன் என்று அவரது பெயர்களும், அடைமொழிகளும், உணர்ச்சிகளும் மாறுகின்றன...' (படலம் 7, வரிகள் 28-30.): 87