பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயற்சிகளும், அதனை ஆதரிக்கும் விமர்சனங்களும் அன்றும் இருந்தன; இன்றும் இருந்து வருகின்றன. ஷெல்லி கடலில் மூழ்கி மாய்ந்த காலத்தில், அவனது சடலம் கரையில் ஒதுங்கிய போது, அவனது சட்டைப் பையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்று கிரேக்க நாடகாசிரியனான சோபாக்ளஸின் நூல்; மற்றொன்று ஷெல்லியின் நண்பனும் கவிஞனுமான கீட்ஸின் கவிதைகள். எனினும், ஷெல்லியின் மரணத்தைப் பற்றிச் செய்தி அனுப்பிய ஒரு பத்திரிகை நிருபன் ஷெல்லியின் சட்டைப் பையில் பைபிள் புத்தகம் இருந்தது என்று எழுதி அதனைப் பிரசுரிக்கவும் வைத்தான். ஷெல்லியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போதும், ஈமக் , கிரியையின் போதும் உடனிருந்த கவிஞனான பைரன் இந்தச் செய்தியைக் கண்டு பெருங்கோபம் கொண்டானாம். பைபிளின் இலக்கியத்தரம் ஷெல்லியைக் கவர்ந்தது உண்மை யென்றாலும், ஷெல்லியைப் பற்றி இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிட்டது அவனை அவதூறு செய்வதே ஆகுமென அறிக்கை விடுத்தானாம். இந்த விவரத்தை பிளண்ட ன் குறிப்பிடுகிறார் (Shelley-E. Blunden). இதனைப் போலவே, “ 'ஷெல்லி உயிருடன் வாழ்ந்திருந்தால், அவன் இறுதியில் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து நின்றிருப்பான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஒருவரான் பிரெளனிங் (Robert Browning) எழுதியுள்ளார், ஆனால், ஷெல்லி தனது மரணத்துக்கு மூன்றே மாதத்துக்கு முன்னர் பைசாவிலிருந்து ஹெ ரேஸ் ஸ்மித்துக்குப் பின் வருமாறு எழுதுகிறான்: " எனக்கு லார்டு பைரனின்மீது சிறிதளவு கூடச் செல் வாக்கில்லை; இருந்திருந்தால், அவரது பெரும் உள்ளத்திலிருந்து கிறிஸ்தவத்தைப் பற்றிய மயக்கங், களைப் போக்க, நான் அதனை - நிச்சயம் பயன்படுத்தி யிருப்பேன்.” இந்த விவரத்தை ஆர்ச்சிபால்ட் ஸ்ட்ராங் என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார் (Three Studies in Stelley-Archibald T.Strong) ஷெல்லியை ந ஸ்திகவாதியிலிருந்து ஆஸ்திகவ 1 தி யாக மாற்றும் முயற்சிகள் அவன் இறந்த காலத்திலிருந்து இன்று வரையிலும் இருந்து வந்தாலும், ஷெல்லி நாஸ்திகவாதி யாகத்தான். அவனது படைப்புக்களில் காட்சியளிக்கிறான், 9}