பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலை 89 காட்டும்.) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்க் தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டு வரச் சொன்னாள். பக்கத்தி லிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே, வேதவல்லி அம்மை ' என்ன சாஸ்திரம் ஆராய்ச்சி செய்கிறீர்கள் ?' என்று கேட் டாள். சங்கர பாஷ்யம் என்று சொன்னேன். வேதவல்லி சிரித்தாள். " சங்கர பாஷ்யமா! வெகு ஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்ருடப் போய் ' ஆனி பெஸண்ட் வலைக்குள் மாட்டிக் கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடைய தேசத்து வீராதி வீரராகிய ஆண் பிள்க்ாச் சிங்கங்கள் சங்கர பாஷ்யம் வாசித்து பொருள் விவரித்துக் கொண்டிருக்கிருர்கள். ஷோக் ஷோக் ! இரட்டை ஷோக் 1’ என்ருள். ராமராயருக்கு பளிச்சென்று கோபம் வந்துவிட்டது. " சரி தானம்மா, கிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்திகள் பிறருக்குத் தெரியாதென்று கினைக்க வேண்டாம் ' என்ருர். "இங்கிலாந்தில் ஸ்த்ரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது” என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில் வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக் கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின் பேரிலே வைத்து விட்டுத் தலைக்கு மேலே உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச் சமயத்தில் ஐலம் கொண்டு கொடுத்தது. வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக் கொண்டாள். ' என்ன ? ராமராயரே, மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது ? ப்ரம்மம் ஸத்யம், லோகம் மித்தை. ஆதலால், வித்வான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக் கொண்டே இருப்பதே மேன்மை’ என்றெழுதி யிருக்கிறதா ?” என்று கேட்டாள். ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது. கொஞ்சம் மீசையைக் திருகிவிட்டுக் கொண்டார். தாடியை இரண்டுதரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினர்.