பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை 12? திருவள்ளுவரும் சொன்னர். துன்பப்பட்டார் அது பொறுக்காமல் அழும் கண்ணிரானது, அந்தத் துன்பமுண்டாக்கியவனுடைய ஐசுவரியத்தை அறுத்தெறியும் ஆயுதமாகும். செல்வம் இனிது. அது முயற்சியினல் சேர்க்கப்படுவது. பயனுள்ள தொழிலே மேன்மேலும் ஊக்கத்துடனும், அறிவுடனும் செய்வதால் பொருள் பெருகும். தீயது செய்தாலன்றிப் பொருள் தேடமுடியாதென்று மூடர் கினேக்கிருர்கள். தீயது செய்யாதபடி சேகரிப்பதே பொரு ளென்றும், மற்றையது பல துன்பமுண்டாக்கி விரைவிலே அழிந்து போவதோர் மருளென்றும் ஒளவை சொல்லுகிருள். பெண்ணும், ஆணும் அன்பு கொண்டு வாழ்வது இன்பங்களி லெல்லாம் சிறந்த இன்பம். உணவும், ஸ்கானமும், பூவும், சந்தனமும் முதலிய இன்பங்களெல்லாவற்றைக் காட்டிலும் காதலின்பமே சிறந்தது. காதலுடைய இருவர் கருத்திலே ஒன்று பட்டவராய் ஆதரவு கொள்ளும் நிலையை மனிதர் கட்டுப்பாடுக ளாலும், பணச் செருக்காலும், அதிேயாலும் பெற விரும்புகிருர் கள். ஆண், பெண் உறவில்ை வரும் துன்பக்தான் மனிதருக்கு இவ்வுலகத்தில் மற்றெல்லாத் துன்பங்களைக் காட்டிலும் அதிகமாக ஏற்பட்டு விட்டது. விவாக முறையைச் சில தேசங் களில் நரகம்போலே செய்துவிட்டார்கள். தெய்வம் கொடுக்கும் இன்பத்தை மனிதர் அறியாமையாலும், பாபசிந்தையாலும் துன்பமாக மாற்றிக் கொள்ளுகிருர்கள். தெய்வத்தை கம்பி மேற்படி மூன்றனுள் எதுவும் இன்றி யமையாததில்லை யென்று கொண்டு, வருவது தானே வருமென்று சொல்லி, எல்லாம் தெய்வத்தின் செய்கையாதலால் நமக்கெவ்வித மான பொறுப்புமில்லையென்று நடப்பதே விடுதலை இன்பம். துன்பம் எது நேர்ந்தாலும் சரியென்று மனசு கவலையை ஒரே யடியாக நெருப்பிலே போட்டுக் கொளுத்திவிட்டு தெய்வத்தின் கினேப்பே கதியென்று நிற்பது விடுதலே. எல்லாத் தருமங்களை யும் விட்டு என்னேயே சரணடைக ' என்று கீதையும் சொல்லிற்று. இந்த விடுதலே பெற்றவன் பண்டாரமாகிக் கங்தையுடுத்தும் பிச்சை வாங்கித் தின்பானென்று சில பாமர ஜனங்கள் நினைக் கிருர்கள். அது முற்றிலும் தவறு. ஆயிரத்திலொரு ஜீவன்