பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாரதி தமிழ் தேட்டத்தில் கம்மால் இயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு காம் காலத்தின் பக்குவத்துக் காகக் காத்திருக்கும்படி கேரிடுகிறது. இதனிடையே, மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது ? துரங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனலும் போச்சு, என்ன ஹிம்சை இது நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல கிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை என்று தீர்ந்து விட்டால் எதைக் கொண் டாடுவது ? இது கட்டி வராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம் ; அதுவரை காம் சாகமாட்டோம். நமது இச்சைகள், நம்முடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லே.