பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர்தம் தேடுதல் 14? காய்ந்தால் இன்பம், பார்த்தாலே இன்பம் , மண், இதன் விளைவு களிலே பெரும்பான்மை இன்பம், இதன் தாங்குதல் இன்பம் ; காற்று, இதைத் தீண்டினல் இன்பம், மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினல் இன்பம் ; மனிதரின் உறவிலே அன்பிருந்தால் இன்பக் கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம், உழைத்தல் இன்பம், உறங்கல் இன்பம் ; ஆடுதல் இன்பம், கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல், அறிதல்-எல்லாம் இன்பம் தான். துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லே ஆல்ை இவ்வின்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக் கின்றன. துன்பங்களே அறிவினல் வெட்டி யெறிந்துவிட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ள வேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களே வெட்டியெறியத் திறமை கொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானல், அது எளிதில் முடிகிற காரிய மாகத் தோன்றவில்லே. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான், சிறிய உண்மைகள் புலப்படுகின்றன. கம்மைச் சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்தி கள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லாரும் இன்பத்துடன் வாழும்படி காம் செய்ய வேண்டும். கல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிருேம். இந்த ஆசைகள் கிறைவேறவேண்டுமானல், பலமான அடிப்படைபோட்டு மெல்ல மெல்லத் கட்டிக் கொண்டு வரவேண்டும். நிலைகொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்கு தல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வவாகை வேண்டுமானுல் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத் தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில் களிலே தேர்ச்சியடைய வேண்டுமானல் அதற்குக் காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். "பொறுத்தவன் பூமியாள்வான். பதறின காரியம் சிதறும். ' இடையே குறுக்கிடும் மரணம். இங்ங்னம் இன் பங்களின்