பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகவத்கீதை முன்னுரை 179 அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய கினேப்புக்களுடையோர் எக் காலத்தும் துக்கங்களிலிருந்து கிவிர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் ப்யம் உண்டு ; ஆபத்து உண்டு ; மரணம் உண்டு. எல்லா வேற்றுமை களும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி. (குறிப்பு: பாரதியார் பகவத்கீதையை மொழி பெயர்த்த தோடன்றி அதற்கு ஒர் அரிய முன்னுரையும் எழுதியுள்ளார். அந்த முன்னுரையின் ஒரு பகுதியே இங்கு சேர்க்கப்பட் டுள்ளது.)