பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பாரதி தமிழ் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலே மீது நீர் போலே. (கீதை, 5-ஆம் அத்தியாயம் ; 10-ஆம் சுலோகம்.) சால நல்ல செய்தியன்ருே, மானுடர்காள், இஃது உங்களுக்கு ? பாவத்தைச் செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்லவழி காட்டி யிருக்கிருன் கடவுள். ஈசனேக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப்படுவதென்றும், கன்கு தெளி வெய்தி, நீங்கள் எத் தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது தாமரையிலே மீது நீர் தங்காமல் நழுவி ஓடி விடுவதுபோல், உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து கிற்கும் வலி யற்றதாய், உங்களைவிட்டு கழுவியோடிப் போய்விடும். "மனிதனுக்குச் சொந்தமான ஒரு செய்கையும் கிடையாது. செய்யும், திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப் பயனே அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.' (கீதை, 5-ஆம் அத்யாயம் ; 14-ஆம் சுலோகம்.) எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொருமையும் சஞ்சல மும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூருக கிற்கு மென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படுத லும் வேண்டா : 'கல்வியும் விகயமு முடைய அந்தணனிடத்திலும், மாட்டி னிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதை யுண்ணும் சஸ்டாளனிடத்திலும், அறிஞர் ஸ்மமான பார்வை யுடையோர் ' (5-ஆம் அத்யாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிரு.ர். எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாரா திருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிரு.ர். எல்லாம் கடவுள் மயம் அன்ருே ? எவ்வுயிரினும் விஷ்ணு தானே கிரம்பியிருக்கிருன் ஸர்வமிதம் ப்ரஹ்ம. டாம்பும் நாராயணன். கரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம் பறையனும் கடவுளின் ரூபம். இப்படி இருக்க ஒரு ஐந்து மற்ருெரு ஐந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல்