பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாரதி தமிழ் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற் கதவைத் திறந்த மாத்திரத் திலே ஸப்த மேகங்களும், ஊழிக் காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்ருே ? ஆதலால் அவர்கள் வெளியேறவில்லை யென்று கினைத்துக் கொண்டாள். ஒரிரண்டு கூடிணங்களில் திடீரென்று உள் வீடெல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற் பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழு மென்று அவள் மிகவும் எதிர் பார்த் தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்றுபோய் விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின. இச் செய்திகளை யெல்லாம் எண்ண மிட்டுக்கொண்டு விசாலாகூஜி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும், ஒடிந்து கிடக்கும் மரங்களேயும் பார்த்து கிற்கையிலே, குச்சிலுக் குள்ளிருந்து ' குவா குவா ! ' என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள் அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாr அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணுவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும் போது :- விசாலாr l விசாலாக ! நான் இரண்டு கிமிஷங் களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே ! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத் தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிருர்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் சேத்தனமான சுயநல சிாஸ்த்ரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னப்பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் ஸ்பையாரைக் கண்டு பிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி