பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாரதி தமிழ் ஏற்கனவே தெரியும் என்ருள். என்னது சொல்லு.' நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிருய் என்ற விசேஷம்.' "ஏன் ? எதற்கு ? எப்படி ? உனக்கு யார் சொன்னர்கள் ? . என்று கேட்டேன். வந்தே மாதரம் என்ருள். மீனம்பாளுடைய அறிவுக்கூர்மை எனக்கு முன்னமே தெரியு மாதலால், அவள் சொல்லியதிலிருந்து அதிக வியப்புண்டாக வில்லை. அதன்பின், நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன் : ஆம். பாரததேசத்தை இப்பொழுது பிரம்மசாரிகளே ரகசிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்துபோய் விட்டது. இயமமலேயிருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சி களும் கிறைந்த ஒரு பாழுங்காடு இருப்பதுபோல் ஆய்விட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரம்மச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகளுகவேனும், ராஜா ஸர் ஸ்வலே ராமசாமி முதலியார் மகளுகவேனும் பிறவாமல், நம் போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால், இந்தப் பஞ்சநாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பதுபோல, இந்த கரிக்கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது, அவனுக்குக் கண் பிதுங்கிப்போய் விடுகிறது. அவனவனுடைய அற்ப காரியங்கள் முடிவு பெறு வதே பகீரதப்ரயத்தனம் ஆகிவிடுகிறது. தேச காரியங்களே இவர்கள் எப்படிக் கருதுவார்கள் ? பிரம்மச்சாரிகள் வேண்டும்; ஆத்ம ஞானிகள் வேண்டும் , தம் பொருட்டு உலக சுகங்களே விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்தச் சுதேசீயம் கேவலம் ஒரு லெளகிக காரியமன்று. இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப் பவர்களுக்கு வீரியம், தேஜஸ், கர்மயோகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மச்சரிய விரதத்தைக் கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனல்