பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 9 என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன ! அந்தக் கண்கள் ! அந்தக் கண்கள் ! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே கிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?" அப்பால் ஒரு உள்ளம் : அடா ! நல்ல துறவடா உன் துறவு ! நல்ல பக்தியடா உன் பக்தி நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்ருே பிள்ளைகள் வேண்டும் ? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னேப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிருர்கள் 1 சீச்சி! நாய் மனமே அமிருத வெள்ளத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிருயா ? லோகோத் தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா ? தர்ம சேவை பெரிதா, ஸ்த்ரீ சேவை பெரிதா ? எதனைக் கைக்கொள்ளப் போகிருய் சொல்லடா சொல் ' பிறகு வேருெரு சிங்தை : எப்படியும் அவளிடமிருந்து ஒர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக் கும். நீ தர்ம பரிபாலனம் செய், என் பொருட்டாக தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம்வரை உன்னையே மானஸிகத் தலை வகைக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று அவள் உறுதி தருவாளானல், இந்த ஜன்மத்தில் ஜீவ்யம் வெகு சுலபமாய் இருக்கும்.' அப்பால் : “ ஒரேயடியாக, அவளுக்கு இன்ைெருவனுடன் விவாகம் கடந்து முடிந்துவிட்டது என்று செய்தி வருமானல், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத் தொடர் ஒன்றுமேயில்லாமல் தர்மசேவையே தொழிலாக கின்று விடலாம்.' பின் மற்ருெரு சிந்தை : ஆ! அப்படி ஒரு செய்தி வரு மால்ை, பின்பு உயிர் தரித்திருப்பதே அரிதாய் விடும். அவளு டைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ் வுலக வாழ்க்கையுண்டா? அப்பால் பிறிதொரு சிங்தை : “ அவள் அன்பு 1 மாதர்களுக்கு அன்பு என்பதோர் கிலேயும் உண்டா ? வஞ்சனே லோபம் இரண் டையும் திரட்டிப் பிரம்மன் ஸ்த்ரீகளைப் படைத்தார்.' இப்படி ஆயிர விதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி