பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பாரதி தமிழ் எனது அறிவைக் கலக்கின. ஆன்மவுறுதி யில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக் கின்றவர், ஒரு கணம் சாr போல் கின்று, தமது உள்ளத்தின டையே நிகழும் புரட்சிகளையும், கலக்கங்களையும் பார்ப்பராயின் மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புக்கள் ஏன் உண்டாகின்றன ? மறப்பும் கினைப்புமாய் கின்ற வஞ்ச மாய மனத்தால் வளர்ந்தது தோழி.' இவ்வாறிருக்கையில் ஒரு காள் திடீரென்று எனது கையில் மீனம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அதைப் படித்துப் பார்த்தபொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். ஒம் தஞ்சாவூர். உடையாய், இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறு கிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்திலே பார்க்கப் போவதில்லை. 'காயன்ன வருகிற தை மாதம் என்னே இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னர் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்துவிட்டார். கல்யாணத்திற்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால், வேட்டை காய் விழுவது போல் விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி கிந்திக் கிருர், நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னே வெளியேருதபடி காவல் செய்து வைத்திருக்கிருர், நீ ஒரு வேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வரமுடியாமல் செய்ய, இவரும் மன்னரென்பவனும் சேர்ந்து சேத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிருர் கள். அவன் நாயன்ன வின் பணத்தின் மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிருன். என்னுள்ளத்திலே