பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 11 அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென் றும், இப்படிபட்ட பெண்ணே பலவந்தமாகத் தாலி கட்டினல் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு, அந்த மிருகம், ' எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக,ய மில்லை. அதைப் பின்னிட்டுச் சரிப்படுத்திக் கொள்வேன். முதலா வது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஒடிப் போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கெட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும் ' என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது. அநேக தினங்களாக எனக்கு இரவில் கித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின் மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. துாக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது கனவுமில்லை, நினைவுமில்லே ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அப்பயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும், கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும், கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினள். நான் நடுங்கிப்போய், மாதா என்னைக் காத்தருள் செய்யவேண்டும்' என்று கூறி வணங்கினேன். உடனே, திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸெளந்தர்யத்தை என்னல் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோமண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்பொழுது தேவி எனக்கு அபயப் பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லாயினள் : குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனே எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனேவியாக வும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வு மில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒர் பச்சிலே படர்ந்திருக்கக் காண்பாய். நாளேக்காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளே