பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 இருந்தனர். உணவு பரிமாறினவர்களுள் புதுவைச் சலவைத் தொழிலாளர் ஒருவர் குறிப்பிடத் தக்கவர். குழுவில் பார்ப்பனர் இருவர் இருந்தனர். அவர்கள் கவிஞரின் நண்பர்கள். பார்ப்பனர் இருவர் இருப்பது குழு வில் சிலருக்குப் பிடிக்கவில்லை. பிடிக்காத சிலர், பார்ப் பனர் இருவருக்கும் தெரியாமல், கவிஞரை நோக்கி, அந்தப் பார்ப்பனர் இருவரையும் இந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்தி விடவேண்டும் என வற்புறுத்தினர். அதற்குக் கவிஞர் சிறிதும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் என் நண்பர்கள்; வந்து விட்ட அவர்களை அனுப்பி விட்டு என்னால் இருக்க முடியாது. நாம் பாப்பனியத்தைக் கண்டிக்கிறோமே தவிரப் பார்ப்பனரைக் கண்டிக்கவோ - வெறுக்கவோ செய்யவில்லை-என்று கவிஞர் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லி விட்டார். பார்ப்பனர் இருவரும் இறுதி நாள் வரையும் எங்களுடன் இனிமையாகப் பழகி அளவளாவி மகிழ்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி, கவிஞரின் உயரிய பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். விழா இறுதியில் கவிஞர் பேசிய நன்றியுரைச் சொற் பொழிவில் பல செய்திகள் தெரிவித்தார். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: மக்களைப் பிராமணர், rத்திரியர், வைசியர், சூத்திரர் - என நான்கு வகையாக ஆரியம் பிரித்திருப் பதல்லாமல், பஞ்சமர் முதலாக மேலும் சில பிரிவுகள் உண்டாக்கி வைத்திருக்கிறது. தீண்டாதவர் என்று சொல்லப்படுபவர் பஞ்சமர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதுநிற்க,- பிராமணர் பிரம்மாவின் முகத்திலிருந்தும், ஷத்திரியர் பிரம்மாவின் தோளிலிருந்தும், வைசியர்