பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62 நடத்தியவருமாகிய மாமேதை கு. சிவப்பிரகாசம் என்ப வர் இருந்தார். அவர் எளிதில் மற்றவரோடு பழகாதவர். அத்தகையவரையே, செட்டியார் விழாவில் மற்றவர்மேல் பொழியப்பட்ட வசைமாரி நனைத்திருக்கிறது. மறுநாள் மாலை நான் பணி மனையிலிருந்து மிதி வண்டியில் சிவப்பிரகாசனாரின் வீடு வழியாக எங்கள் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தேன். தெருக் குறட்டில் நின்றிருந்த வணங்காமுடி மன்னராகிய கு. சிவப்பிரகாச னார் என்னைத் தெருவில் கண்டதும், சார் - சார்’ என்று கூவிக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். மிதி வண்டியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த நான், கீழே இறங்கிச் சிவப்பிரகாசனாரை நோக்கி நீங்கள் உங் கள் வாயிலிலேயே நில்லுங்கள் - நான் அங்கு வருகிறேன்என்று சொன்னேன். அதற்கு அவர், என்னை நோக்கி, 'நீங்கள் அங்கேயே நில்லுங்கள் - நான் வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்து என்னை அடைந்தார். என்னங்க, ஏதாவது சிறப்பு (விசேடம்) உண்டா என்று நான் அவரை வினவினேன். நேற்றுக் குமாரசாமி செட்டியாரின் பாராட்டு விழாவிற்கு நீங்கள் சென்றிருந்தீர் களா? என்று என்னை வினவினார். நான் ஊருக்குச் சென்றிருந்தேன் - அதனால் போகவில்லை - என்றேன். நேற்று மற்ற புலவர்களை யெல்லாம் மட்டப்படுத்திப் பேசினார்களாமே - உங்கட்குத் தெரியுமா?- என்று கேட் டார் அவர். எனக்குத் தெரியாது - யான் சுவடியை வாங்கிப் பார்க்கிறேன் - என்று சொல்லிச் சென்று விட் டேன். மறுநாள் கவியரங்கச் சுவடியொன்றை ஒருவரிட மிருந்து தருவித்துப் படித்துப்பார்த்து, சிவப்பிரகாசனார் சொன்னது உண்மைதான் என்று தெளிந்து கொண்டேன்.