பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66 இருந்தது. அதில், மேடை நாடகம், திரையோவியம், சொற்பொழிவு முதலியவை இடம்பெற்று வந்தன. ஒரு நாள் அந்த அரங்கத்தில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்திற்குப் பாவேந்தர் தலைமை தாங்கிச் சொற் பொழிவாற்றினார். அவர் அங்கே கூறிய கருத்துகளுள் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்: ஒளவையார் தம் ஆத்திசூடி என்னும் நூலில், போர்க் களத்தில் சென்று நிற்காதே என்னும் பொருளில் முனை முகத்து நில்லேல் என்று எழுதிவைத்துள்ளார். இது எவ் வாறு பொருந்தும்? புதுச்சேரியில் சண்டை நடந்தால் நான் திண்டிவனத்துக்கு ஓடி விடுவதா? ஒளவையார் கூறியிருப்பது கோழைத்தனத்துக்கு இட்ட வித்தாகும். அதனால், சுப்பிரமணிய பாரதியார் தமது புதிய ஆத்தி சூடி என்னும் நூலில், போர்க் களத்திலே போய் முத லிலே நில் என்னும் பொருளில் முனையிலே முகத்து நில் என்று எழுதியுள்ளார் - என்பதாகக் கவிஞர் ஒரு கருத்து வெளியிட்டார். இந்தக் கருத்து எனக்குப் பிடித்தமாக இல்லை. - - அப்போது கவிஞர் வீட்டிற்கு நான் அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். ஒருநாள் இந்தக் கருத்தைக் குறிப்பிட் டுக் கவிஞரிடம் பின்வருமாறு கூறினேன்: அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் சிறுசிறு பகுதிகட் கெல்லாம் அரசர்கள் இருந்து தமக்குள் அடிக்கடிப் போர் செய்து கொண்டிருந்தனர். நாட்டில் நிகழ்ந்த பல்வேறு போர்க் கொடுமைகளைக் கண்டு வருந்திய அன்னை ஒளவையார் உலகில் இனிப்போரே கூடாது எனப் பட்டறி