பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 நான் கூறியதை அமைதியாகவும் வியப்புடனும் கேட் டுக் கொண்டிருந்த கவிஞர் பின்வருமாறு கூறி என்னை மடக்கிவிட்டார் : - . போர் கூடாதுதான். ஒளவையார் கூறியிருப்பதும் ஒரு வகையில் சரிதான். ஆனால் ஒளவையாரின் கூற்று இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. ஏனெனில், நாம் தமிழ் நாட் டில் வீழ்ந்து கிடக்கின்ற தமிழை மீட்க வேண்டும் - சாதி மதப் பூசல்களை வெல்ல வேண்டும் - அதற்காக நம் மக் கட்கு மற உணர்வு ஊட்டப்படவேண்டும். அந்தப் பணிக்கு உறுதுணையாக நாம் பாரதியாரின் பாடல்களைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் - என்று கவிஞர் கூறினார். நான் ஏற்றுக் கொண்டவன்போல் வாய்பேசாது இருந்து விட்டேன்.