பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 இவர்கள் இருவரும் (இன்ன) ஊரிலிருந்து கவிஞரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். (ஊர்ப் பெயர் எனக்கு நினை வில்லை) பழ வகைகள் பலவும் கொண்டு வந்துள்ளனர். இவர்களை அழைத்துக் கொண்டு கவிஞர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டிக் கவிஞரைப் பார்க்கவேண்டும்என்று சென்னேன். கவிஞர் ஆர்வத்துடன் எழுதிக் கொண் டிருக்கிறார். இப்போது இடையூறு செய்தால் சிந்தனை கலைந்து விடும்; எனவே இப்போது பார்க்க முடியாது என்ற பதில் கிடைத்தது. வெளியூரிலிருந்து வந்திருக்கிறார் கள்-அவர்களுக்காக வரச்சொல்லுங்கள் என்றேன். போன வர் கவிஞரைக் கண்டு கேட்டு வந்து மீண்டும் அதே பதி லைச் சொன்னார். நான் விட வில்லை. வெகு தொலை வில் உள்ள வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள்; கவிஞ ரைப் பெரிதும் மதித்துப் பொருள்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு மிக்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள். தயவு செய்து வரச்சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோள் கவிஞரிடம் மீண்டும் அறி விக்கப்பட்டது. அவ்வளவுதான்! கவிஞருக்குச் சீற்றம் பொங்கி எழுந்தது போலும்! விரைவுடன் ஒடி வந்தார். எங்களை நோக்கி, ‘என்னையா பார்க்க வேண்டும்-இந்தா நன்றாகப் பாருங்கள்-நன்றாகப் பாருங்கள் என்று சொல்லிக்கொண்டே, மார்புமேல் அணிந் திருந்த உள் சட்டையைக் (பனியனைக்) கழற்றி எறிந்து விட்டுச் சுற்றிச் சுற்றித் திருப்பித் திருப்பி உடம்பைக் காட்டினார். (இதை எழுதும்போது எனக்குச் சிரிப்பு வரு கிறது-படிப்பவர்க்கு எப்படியோ) உடனே நாங்கள் மூவரும் தப்பித்தோம்-பிழைத்தோம் என்று வெளியே ஓடிவந்து விட்டோம்” என்று வடமலை கூறினார்.