பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

9 பாவேந்தரின் இறுதிப் பயணம் நான் (சு.ச.) ஒரு மூளைக் கட்டி (Brain–Tumour)நோயாளி. இது 1962 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள-உலகப்புகழ் பெற்ற நரம்பியல் மருத் துவமேதை (Neuro Surgeon) பா. இராம மூர்த்தியவர்க ளிடம் மருத்துவம் பார்த்துக் கொண்டேன். அடிக்கடிச் சென்னைக்கு நேரில் சென்றும் மடல் வாயிலாகவும் மருத்துவஅறிவுரை பெற்றுத் தேறி வந்தேன். 1964 ஏப்ரல் திங்களில், B.M.R. Test என்னும் மருத் துவ ஆய்வினைப் புதுவை அரசு மருத்துவமனையில் செய்து கொண்டு அதன் முடிவை (Result) எடுத்துக் கொண்டு தம்மிடம் வரும்படி திரு. இராமமூர்த்தி எழுதி யிருந்தார். நான் அவ்வாறே B.M.R. Test முடிவு எடுத் துக் கொண்டு, 1964 ஏப்ரல் 20 ஆம் நாள் இரவு 8-40 மணிக்குப் புதுவையிலிருந்து புறப்படும் புகைவண்டியின்