பக்கம்:பாரதி லீலை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யாவும் பராசக்தியே! “அனைத்துயிரினும் அன்னை யுருவாய் இலங்குக் தாய்திருதேவி யாரோ அன்னவள் போற்றி அன்னவள் போற்றி போற்றி போற்றி” --தேவி மகாத்மியம் . மொழிபெயர்ப்பு சென்னை, மத்தியத் தொழிலாளர் சங்கத் துக்குப் பாரதியார் ஒரு சமயம் சென்றிருந்தார். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் பூரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் அப்பொழுது அங்கே இருந்தார். சங்கத்திலே அன்னிபெஸண்ட் படம் மாட்டப்பட்டிருந்தது. இந்த அம்மாளே எல்லாரும் திட்டுகின்றனரே " என்று அப்படத் தைப் பாரதியாருக்குக் காட்டிக் கூறினுர் பூரீமான் முதலியார். அவளேயா திட்டுகிருர்கள் ! அவள் பராசக்தி யன்ருே ?” என்று சொன்னர் பாரதியார். சொல்லிவிட்டுப் பத்து நிமிஷம் அந்தப் படக் தையே உற்றுக் கவனித்தார். கவனித்து விட்டு,

  • நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர்மணிப்பூண்." என்ற பாட்டைப் பாடினர். அரசியல் கொள்கை யிலே மாறுபட்டிருந்த போதிலும் பெண்ணேத் தெய்வமாகப் பாரதியார் பாவித்திருந்தார் என்ப தற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/18&oldid=816535" இருந்து மீள்விக்கப்பட்டது