பக்கம்:பாரதி லீலை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


71 பழங் காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி. உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறக்கு போ, பற பற -மேலே, மேலே, மேலே. ఢీ தம்பி -தமிழ்நாடு வாழ்க என்றெழுது, தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெது. தமிழ் நாட்டில் விதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங் கள் மலிக என்றெழுது. அந்தத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களிலே கவின கலைகளெல்லாம் பயிற்சிபெற்று வளர்க என் றெழுது. தமிழ் நாட்டில் ஒரே ஜாதிகான் உண்டு-அதன் பெயர் தமிழ்ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என் றெழுது. ஆனும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு கலைகள் என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என் றெழுது. பெண்ணேத் தாழ்மை செய்தோன் கண்ணேக் குத்திக்கொண்டான் என்றெழுது, பெண்ணே அடைத்தவன் கண்ணே அடைத் தான் என்றெழுது. தொழில்கள், தொழில்கள், தொழில்கள் எனறு கூவு. தப்பாக வேதம் சொல்பவனேக் காட்டிலும் கன்முகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கடவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/78&oldid=816600" இருந்து மீள்விக்கப்பட்டது