பக்கம்:பாரதீயம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியற்றிய சிந்தனைகள் 105

முறைக் கல்வியைப் பெற்றவர்களே. இவர்கள் யாவரும் கெட்டா போனார்கள்? இம்முறைக் கல்வியின் விளைவுபற்றி,

செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது:

தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன; நலமோ ரெட்டுனை யுங்கண்டி லேனிதை

நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்

(எட்டுணை-எள்-துணை)

என்று இவர் கூறும் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதாக இல்லை. இந்தக் கல்வி முறையை வார்தாக் கல்விமுறையாலும், இராஜாஜி கொண்டுவந்த குலமுறைக் கல்வியாலும் தகர்த்தெறிய முடிய வில்லை; அவைதாம் நம் நாட்டில் செல்லாக்காசாயின. நாடு விடுதலையடைந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் ஆயினும் மைய அரசாலும் மாநில அரசாலும் நம் நாட்டுக்கேற்ற கல்வி முறையை வகுக்க இயலவில்லை. இன்னதுதான் நம் நாட்டுக் கல்விமுறை என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தவும் இயலவில்லை. பழைய ஆங்கில முறைக் கல்வியில் சில ஒட்டுவேலைகள்’ செய்கின்றனரேயன்றி, அதனை அடியோடு அகற்றிப் புதுக் கல்வி ஏற்பாட்டை (Curriculum) வகுக்கவில்லை. இங்குப் பாரதியின் கவிதைக்கு மதிப்புத் தரும் அளவுக்குக் கவிதை நுவலும் கருத்திற்குத் தரமுடியவில்லை. நாடு விடுதலை பெறுவதற்குமுன் இஃது ஒரு பிரசாரக் கவின்தயாகப் பயன்பட்டிருக்கலாம்; இப்போது இதனைக் கூறுவது பத்தாம் பசலித்தனமாகும். நாம்ே வகுத்துக்கொண்ட அரசு இன்னும் தாய்மொழிமூலம் கல்வி புகட்ட வழிவகைகளை வகுக்க முடியாம விருக்கின்றது. அப்படியொருமுறை செயற்பட்டால் பின்விளைவுகள் என்னமோ என்று எண்ணித் தயங்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

அறிவியல் கல்வி : இன்று அறிவியல் வளர்ச்சியை அறிவு Govt. Lity’ (Explosion of knowledge) Grssly opfr. gigo வாற்றல் ஆய்விலும் விண்வெளி ஆய்விலும் நாடு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகுதான் இத்தகைய துறைகளிலெல்லாம் கவனம் செலுத்த நம் அறிவியலறிஞர்கட்கு வாய்ப்புக் கிட்டியது. அண்மைக் காலத்தில் ஆரியபட்டா, பாஸ் கரா, ஆப்பிள் போன்ற விண்கலங்களை-துணைக் கோள்களை. விண்வெளியில் செலுத்தி உலகப் புகழ் பெற்றனர் நம் நாட்டு அறி வியலறிஞர்கள். நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே பாரதியார் உள்ளத்தில் அறிவியல் கல்வியற்றிய சிந்தனை ஒடியுள்ளது.

6. சுயசரிதை-29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/121&oldid=681142" இலிருந்து மீள்விக்கப்பட்டது