பக்கம்:பாரதீயம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசன கவிதைகள் #23

காளிக்குப் பூச்சூட்டினேன். அதைக் கழுதையொன்று தின்ன வந்ததே.

என்பது. இதன் உட்பொருளைக் கவிஞர் இவ்வாறு விளக்குவார்:

பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன்

அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது.

பராசக்தியைச் சரணடைத்தேன்.

நோய் மறைந்து விட்டது.

பராசக்தி ஒளியேறி எனது அகத்திலே விளங்கலாயினள்.

அவள் வாழ்க. நம் மனம் கவிஞனின் எண்ணத்தோடு இணைந்து செல்வ முடியாவிட் டால் இத்தத்துவத்தை அறிதல்-உணர்தல்-அசிது. அடுத்த கவிதையிலும் (7) பாம்புப் பிடாரன் தொடர்கின்றான்.

பாம்புப் பிடாரன் குழலூது கின்றான்

குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?

பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? - என்று மூன்று வினாக்களை எழுப்புகின்றார். அவரே இவற்றிற்கு விடையும் தருகின்றார்.

அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது, குழல் தனியே இசை புரியாது, உள்ளம் குழவிலே ஒட்டாது. - உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும், குழல் பாடும்.

இஃது சக்தியின் வீலை.

என்பதாக, இந்த விளக்கத்தைப் பின்னர்,

கருவி ப்ல. பாணன் ஒருவன்.

தோற்றம் பல. சக்தி ஒன்று.

அஃது வாழ்க..

என்று ஒரு வாய்பாடாக்கித் தந்துவிடுவார். அடுத்த கவிதையில்,

வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்;

இதன் பயன் இன்பமெய்தல்.

உள்ளம் தெளிந்திருக்க: உயிர்வேகமும் சூடும் உடையதாக:

உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க,

மகாசக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்:

நாம் வாழ்கின்றோம்.

பா-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/145&oldid=681168" இலிருந்து மீள்விக்கப்பட்டது