பக்கம்:பாரதீயம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை உண்மைகள் 137

என்றும் இன்பந் தருகின்றானல்லவா ? கீட்ஸ் என்ற கவிஞர் அழகே வடிவமான பொருள் என்றும் இன்பந் தருவது என்று கூறியுள்ளனத ஈண்டு நினைவுகூரலாம். இதே கவிஞர், அழகே உண்மை, உண்மையே அழகு” என்றும் கூறியுள்ளார். இஃது அன்பே சிவம், சிவமே அன்பு என்ற திருமூலரின் கருத்துடன் ஒருபுடை ஒத்திருப் பதைக் கண்டு மகிழலாம்.

தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த கவிதைகளுள் ஒன்றாகிய மதுரைக்காஞ்சி மாத்யூ ஆர்னால்டு கூறிய கவிதையின் இயல்பு களுக்குப் பெரும்பாலும் ஒத்து வருகின்றது. என்றும் அழியா உண்மைப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது. முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரமும் மூன்று பெரு நீதிகளை அடிப்படையாகக்கொண்டு தோன்றிய காவியம் என்பதை நாம் அறிவோம். காவியமும் தனி விட்டமின் மாத்திரை போலன்றி உண்ணும் உணவாகிய கறிகாய்களைப்போல்-பழங்களைப்போல்இன்பங் தருகின்றது. காவியத்தைப் படிக்குங்கால் உணவினை உண்பது போன்ற அநுபவத்தையே பெற்றுவிடுகின்றோம். அற வுரைகளைக் கேட்கின்றோம் என்ற அநுபவமே நமக்கு ஏற்படுவ தில்லை. வெறும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் துவலும் நூல்களும் தமிழில் உண்டு. இடைக்காலத்தில் தோன்றிய பழமொழி, ஆசாரக்கோவை, திரிகடுகம், நான்மணிக்கடிகை போன்றவை.இவ்வகை யைச் சார்ந்தவை. இவையும் வாழ்க்கை நெறிகளையே கூறினும், கூறும் முறையில் வேற்றுமை உண்டு. இவற்றைப் பயிலுங்கால் அழகிய விட்டமின் குளிகைகளை விழுங்குவது போன்ற அநுபவம் ஏற்படுகின்றதை அறியலாம்.

இக்கூறியவற்றால் அறவுரை கூறும் செய்யுள் கவிதையாக இருக்க முடியாது என்று கருதுவது தவறு என்பதை அறிதல் வேண்டும்.

இதனால் கவிஞனின் வேலை அறவுரை கூறுவதே என்று கருதுவதும் கூடாது. அவன் வேலை இன்பத்தை ஊட்டும் கவிதை புனைவது தான். ஆனால் அவ்வின்பம் நிலைத்ததாக அமைய வேண்டுமாயின், அக்கவிதையும் ஆழமான உண்மைப் பொருளைக்கொண்டு இலங்க ண்ேடும். தமிழ்க் கவிதையின் இந்த உண்மைக்கு ஆபர் குரோம்பி யின் கருத்தும் அரணாக அமைகின்றது. அவர் கூறுவார்: இலக் கியத்தில் காட்டப்பெறும் கற்பனை வாழ்வின் உயரிய குறிக்கோள் நடைமுறை வாழ்க்கையில் என்றும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தூண்டு விசையாக அமைதல் வேண்டும்; நடைமுறையில் அல்லது அறிவாற்றலின் அடிப்படையில் இதனை அடைவதில்

3. A thing of beauty is a joy forever—Keats. 4. Beauty is Truth, is Truth, beauty—Keats.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/153&oldid=681177" இலிருந்து மீள்விக்கப்பட்டது