பக்கம்:பாரதீயம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 பாரதீயம்

மேற்கொள்ளும் முயற்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்” என்பதாக. அப்பொருளைக் கலைஞன் ஏனையோர்போலச் சாதாரண மாக எடுத்துக் கூறான். உண்மையைக் கற்பனை , அநுபவம் என்ற இரண்டுடன் கலந்து அழகு வடிவமான கலைப் பிண்டமாக்கித் தருவான். இங்ஙனம் செய்தால்தான் அவன் கலை, நிலை பெற்றிருக் கும்; நிரந்தரத்துவமும் அடைந்திருக்கும்.

கெஞ்சுக்கு உரைத்தல் : நெஞ்சுக்கு உரைப்பதுபோல் பாரதி யாரின் சில பாடல்கள் காணப்படுகின்றன. தனிமனிதன் சமூகத்தின் ஒர் உறுப்பு. தனிமனிதன் யோக்கியனாக, சிறந்தவனாகத் தன்னை ஆக்கிக்கொண்டால் சமூகமும் சிறந்த ஒன்றாக அமையும் என்பது பாரதியாரின் கோட்பாடு. நமது மனம் பேயாய் அலையும். ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு ஊசலாடும்; அடுத்ததை நோக்கி அடுத் தடுத்து உலவும். புதியதைக் காணில் புலழிைந்து நிற்கும். பிணத் தினை விரும்பும் காக்கையைப்போல் அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்து அதனை நாடும். இன்பத் தையே நாடி எண்ணிலாப் பிழை செய்யும்; இன்பமென்றெண்ணி துன்பத்து வீழ்ந்து மயங்கும். இது சகத்தின் விதிகளைத் தனித்தனி யாக அறிந்தாலும் பொது நிலையை அறியாது; அறியவேண்டிய பொருளையும் அறியாது மயங்கும். இத்தகைய மனத்திற்குக்கட்டளை விடுகின்றார் கவிஞர்.

பேயாய் உழலும் சிறுமனமே!

பேணாய் என்சொல் இன்றுமுதல் நீயாய் ஒன்றும் நாடாதே

தினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும்

தகுமம் எனயான் குறிப்பதிலும் ஒயா தேநின் றுழைத்திடுவாய்

உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.” இங்ஙனம் கட்டளையிட்டவர் மனப்பெண்ணை நோக்கிப் பேசுவார்:

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்! நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்; இத்தனை நாட்போல் இனியுநின் இன்பமே விரும்புவன் நின்னை மேம்படுத் திடவே 5. But the perfect significance we find in the imagined life of literature is a continual incentive to the noblest endeavour of actual life; the endeavour to attain, a practically or intellectually as much significance as may be.

—Lascelles Abercrombic; Principles of Literary Criticism p. 57 6. வே. பா. மனத்திற்குக் கட்டளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/154&oldid=681178" இலிருந்து மீள்விக்கப்பட்டது