பக்கம்:பாரதீயம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 பாரதீயம்

ஆண்டதோர் அரசாமோ?-எனது

ஆண்மையும் புகழுமோர் பொருளாமோ?*

என்று எண்ணுகின்றான். வேள்வியினால் பாண்டவர்கட்குக் கிடைத்த பொருள்களையும், பெருமைகளையும் சிறப்புகளையும் எண்ணி எண்ணி ஏங்குகின்றான். நெஞ்சிற் கருதியவற்றையெல்லாம் சகுனியிடம் (1.6 : 42-51) சொல்லுகின்றான். ஏந்திழையாள் (திரெளபதி) தன்னை நோக்கிச் சிரித்ததையும் கோடிட்டுக் காட்டி,

பேச்சை வளர்த்துப் பயனொன்று

மில்லை,என் மாமனே!-அவர் பேற்றை அழிக்க உபாயஞ்

சொல்லுவாய் என்றன் மாமனே! தீச்செயல் நற்செயல் ஏதேனினும்

ஒன்றுசெய்து நாம்-அவர் செல்வங் கவர்ந்தவ ரைவிட

வேண்டும் தெருவிலே.”

என்று தன் மனக்கருத்தை வெளியிடுகின்றான்.

பாண்டவர் வேள்வியிற் சமைத்தது போன்று, அளவற்ற பொருட்செலவில் வையகமீதில் இணையற்றதாக மண்டபம் சமைக்கச் செய்ததும், அதனைப் பார்த்து மகிழப் பாண்டவர்களை மறுவிருந்தாட அழைத்து வருமாறு விதுரனைப் போக்கியதும் விருந்திற்குப்பின்னர்ச்சகுனியைத் தருமனுடன் கவறாடச் செய்ததும், அதில் பாண்டவர்கள் அனைத்தையும் இழந்து அடிமைகளானதும், துரியோதனன் தம்பி துச்சாதனனைக்கொண்டு பாஞ்சாலியை மன் றுக்கு இழுத்து வந்து உலகம் கேட்டிராத முறையில் அவமானம் அடையச் செய்ததுமான செயல்கள் தொடர்சங்கிலி போல் நிகழ் வதைக் காட்டிப் பாரதப்போரையும் அதில் துரியோதனன் தன் தம்பியருடன் மாண்டு போவதையும் நினைக்கச் செய்கின்றார்.

இவை அழுக்காறு உடையார்க்கு அதுவே சாலும்’ என்றும்

அழுக்கா றெண்வொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்” என்றும் பொது மறையில் காணப்பெறும் வள்ளுவரின் வாய்மொழி களையும் சிந்திக்கச் செய்கின்றன.

34. பா. ச. 1, 5 ; 20,

35. டிெ. 1. 6 : 52.

36. குறள்- 165.

37. ;- 1 68.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/162&oldid=681187" இலிருந்து மீள்விக்கப்பட்டது