பக்கம்:பாரதீயம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகளில் காணும் சுவைகள் #53

வேறுபக்கமாகத் திருப்பிக் கோள்ளுகின்றோமன்றோ? அதுவும் சேற்று நாற்றமும் சேர்ந்து வீசத் தொடங்கினால் சொல்ல வேண்டிய தில்லை.

- (2) நாம் அரிச்சந்திர நாடகத்தைப் பார்க்கின்றோம். சந்திரமதி சொல்லொணாத் துயர்ப்பட்டும் அதற்கு ஒரு முடிவு இல்லாமலும் தவிக்கின்றாள். இந்நிலையில் அவளுடைய ஒரே மகன் லோகிதாசன் பாம்பால் கடியுண்டு மயக்கமுற்றுக் கிடப்பதையும், அவனைத் துக்கி மடியில் கிடத்திக்கொண்டு தாயுள்ளம் தாங்க முடியாமல் தவிப்பதையும் காண்கின்றோம். இக்காட்சியைக் காணும் நம் உள்ளம் வருந்தாமலும் உருகாமலும் இருக்க முடியுமா? நாடகத்தைப் பார்ப்போர் கூட்டம் சந்திரமதியாய் நடிக்கும் பெண் னின் திறனைக் கொண்டாடுவார்கள்; அவர்கள் கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாய் வடிந்த வண்ணமும் இருக்கும். இங் கனம் துக்கக் கடலில் மக்களை மூழ்கடித்த போதிலும், மக்கள் மறுமுறையும் அந்நாடகத்தைப் போட்டி போட்டுக்கொண்டு பார்க் கச் செல்லுகின்றார்கள். யான் காரைக்குடியில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபொழுது, அந்த ஊரில் பெண்ணெடுத்து மணந்துகொண்ட மாணாக்கர் ஒருவர், மாமனார் வீட்டிலிருந்து கொண்டு கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அவர் அம் பொழுது 5, 3, 1 வயதுகளில் உள்ள மூன்று பிள்ளைகளின் தந்தை. பெரியம்மை வீட்டிலுள்ள அனைவரையும் பார்த்துவிட்டது. ஏதோ ஒருவகையில் பெரும்பாலோர் தப்பித்துக்கொண்டனர்; ஒரே வார்த் தில் பிள்ளைகள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக அம்மை நோயால் மாண்டனர். இக்காட்சியைக் கேட்போருக்கே குலை நடுக்கம் ஏற்படு கின்றதன்றோ? நேரில் கண்ட எனக்கு எப்படியிருந்திருக்கும்: இப்படி ஒரு காட்சியை மனம் மறுபடி ஒருமுறை காண் விரும்புமா?

(3) கலிங்கத்துப்பரணியில் களம் பாடியது என்ற பகுதி யில் போர்க்களிக்காட்சிகளைப் படிக்கின்றோம். கால்வேறு.கைவேறு, தல்ை வேறாக வெட்டுண்டு கிடக்கும் வீரர்களைப்பற்றிய செய்திகள், மரித்த கணவன்மார்களின் உடலைத் தேடிக்கொண்டு வரும் மனைவிமார்களின் சோகக் குரல்பற்றிய செய்திகள், தலைமகள், குற்றுயிராகக் கிடந்த தன் கொழுநனின் உடலைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு அழும் சோகக் காட்சிகள்பற்றிய செய்திகள் போன்றவற்றைக் கண் ணிர் உகுத்துக் கொண்டே படிக்கின்றோம்; மீண்டும் மீண்டும் படிக்கின்றோம்; பலமுறை அக்காட்சிகளை வரு னிக்கும் பாடல்களைப் படிப்பதற்கு ஆர்வம் கொள்ளுகின்றோம். சில ஆண்டுகட்கு முன்னர்க்கிழக்கு வங்காளத்தில் நடைபெற்ற போர்க் காட்சிகளையும், நேரில் சென்று பார்த்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. பிணத்தின்மேல் பினமாகக் கிடந்த நிலைகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/169&oldid=681194" இலிருந்து மீள்விக்கப்பட்டது