பக்கம்:பாரதீயம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாரதீயம்

கூணன் ஒருவன்வந்திந் நாணி பின்னலைக்

கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்

ஆனை மதம்பிடித்திவ் வஞ்சி யம்மையின்

அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும்

பானையில் வெண்ணெய்முற்றும் தின்று விட்டதால் பாங்கி யுர்ோகிணிக்கு நோவு கண் டதும்

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில் பத்துச் சிறு ர்வந்து முத்த மிட்டதும் நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து

நாற்ப தரசர்தம்மை வாக்க ளித்ததும் கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக்

கொங்கத்து மூளிகண்டு கொக்க ரித்ததும் வித்தைப் பெயருடைய வீனி பவளும்

மேற்குத் திசைமொழிகள் கற்று வந்ததும் எத்தனை பொய்களடி என்ன கதைகள்: ‘

என்று குறியிடம் செல்லக் காத்திருக்கும் நாயகியின் காதில் விழு கின்றன. இவள் காதில் விழுந்த செயல்கள் யாவும் அருவருப்பை விளைவிக்கக்கூடியவை என்பது சொல்லாமலே போதரும். -

அற்புதம் : இதனைத் தமிழில் வியப்புச் (மருட்கைச் சுவை என்று வழங்குவர். மக்கள் பல பொருள்களைக் கண்ணுறுங்கால் அவற்றோடு தம் மனநிலையைச் சேர்த்துச் சிறப்பாக அநுபவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பொருளைக் கண்ணால் கண்டவுடன் அதைப்பற்றிச் சில எண்ணங்கள் மனத்தில் உதிக்கின்றன. எதிரில் காண்ப்பெறும் பொருளின் பண்புகள், அதன் சிறப்பியல்புகள் இவைபற்றி ஆராய்கின்றனர். பிறகு தம் மனநிலைக்கு ஏற்றவாறு அப்பெர்ருள்களை உட்கொள்ளுகின்றனர். இது விழக்கமாக நடை பெறுவது. இதற்கு மாறுபாடாக எதையாவது கண்ணுற்றால் உடன்ே வியப்புண்ர்ச்சி எழுகின்றது. வியப்பிற்கும் நகைப்பிற்கும் பொருள் களின் இயற்கைக் குணங்கள் மாறியிருப்பது பொதுவான காரண்ம். ஆனால், நகைப்பிற்குரிய பொருள் இயற்கையினின்று மாறுபடுவதுடன் பிறரால் வேண்டாத வண்ணமும் அமைந்திருக்கும்; வியப்பு அங்ஙன மன்று. அதன் பரிணாமம் யாவராலும் விரும்பத்தக்க வண்ண்ம் இருக்கும். சில இடங்களில் விரும்பத்தகாத முறையிலும் மாறுதல் உண்டாகிப் பார்ப்போரை வியக்கச் செய்வதும் உண்டு. இதை மறுப்பதற்கில்லை. ஆயினும், நாம் எதிர்பாராத முறையில் ஒன்று

21. கண்ணன்-என் காதலன்-(2-2, 3, 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/182&oldid=681209" இலிருந்து மீள்விக்கப்பட்டது