பக்கம்:பாரதீயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 7

பற்றிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு கொள்கை. ‘வந்தே மாதரம் ஒன்றே தாரகம்’ என்பது இதன் உயிராய பண்பு. எனவே,

வீர சுதந்திரம் வேண்டிகின்றார்பின்னர்

வேறொன்று கொள்வா ரோ ? - என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில்

அறிவைச் செலுத்துவா ரோ: என்று கேட்கின்றார். நாயன்மார்களுக்கும் ஆழ்வார்கட்கும்.பக்தி அவர் தம் மூச்சாக இருந்தது போலவே, இவருக்கு விடுதலையே மூச்சாக இருந்தது. சிட்டுக்குருவியைப் போலவே எப்போதும் விடுதலையை வேண்டி நிற்பவர்.

விட்டு விடுதலை யாகிகிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே.* என்று தம் மனத்திற்குக் கட்டளைடுயிகின்றார்; பல்லவி பாடு கின்றார். தெய்வத்தை நோக்கி,

“தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா ? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டு களையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா ?’20 என்று வேண்டுவதில் இவர்தம் விடுதலை நாடி துடிப்பதைக் காண் தின்றோம். சமயப்பற்று இங்காட்டு மக்களிடையே குருதியுடன் ஊறிக் கிடப்பதை நன்கு அறிந்தவர் பாரதியார். சிவன், கண்ணன், இராமன், முருகன், இயேசுநாதர், அல்லா என்ற பெயர்களைக் கூறிய அளவில் பிறவித்துயர் அனைத்தும் அறுந்தொழியும் எனச் சுட்டியுரைத்தலும், சமயத் தொண்டர்களை வழிபடுதலும் சமயப் பற்றாளர்களின் நடைமுறையொழுக்கங்கள் என்பதைத் தெளிவாக அறிந்தவர் நம் கவிஞர் பெருமான் ; கல்லையும் மண்ணையும் கடவுளர்களாகப் பாவித்து வழிபடுவதை நேரில் கண்டவர். எனவே, இந்திய நாட்டையே பாரதமாதாவாகவும், சுதந்திரத்தையே சுதந்திர தேவியாகவும் பாடிப் பரவி இம்மரபினைத் தழுவிக்கொள்ளுகின் றார். சமயத்துறைப் பாங்கில் ஒரு கொள்கையைப் பரப்பினாற் றான் இந்நாட்டு மக்களுக்கு ஏற்கும் என்பதை நன்கு அறிந்து தெளிந்தவர். எனவே, பாரததேவியின் திருத்தசாங்கம் பாடு கின்றார் : பாரதமாதா நவரத்தினமாலை"யைப் பாடி மகிழ்கின்றார்.

18. தே.கீ. சுதந்திரப் பெருமை-1

19. வே.பா. விடுதலை - சிட்டுக்குருவி. 20. பாரதியார் கட்டுரைகள் - சிட்டுக்குருவி - பக். 139,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/23&oldid=681249" இலிருந்து மீள்விக்கப்பட்டது