பக்கம்:பாரதீயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதீயம் 13

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா !

மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ; கலிய ழிப்பது பெண்க ளறமடா :

கைகள் கோத்துக் களித்துகின் றாடுவோம். 40 என்று இந்த அரணுக்கும் வலியூட்டுவார். காலத்திற்கேற்ப, நடை முறைக்கேற்பப் பெண்ணினத்திற்கு வேண்டும் ஆண்மைக் கூறு களைப் புதிய பார்வையுடன் எடுத்துக் காட்டுவார் நம் புதுமைக் கவிஞர்.

கிமிர்ந்த கன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் . என்ற கவிதையில் இவற்றைக் காணலாம். புதுமைப் பெண்ணுக்கு *உதய கன்னி என்று திருநாமமும் சூட்டுகின்றார் ! உதய சூரியன்’ போல் ஒளிவிட்டு எழவேண்டும் என்று விழைகின்றார்.

இக்காலக் கவிஞர்களுள் பெண்மை வாழ்க!” என்று கூத்திடும் முதற்கவிஞர் இவரே : பெண்மை வெல்க !’ என்று முழுமனத்துடன் விழைபவரும் இவரே. .

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும் ;

உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும் ; உயிரி னும்இந்தப் பெண்மை இனிதடா !

ஊது கொம்புகள் : ஆடுகளி கொண்டே.4.2 என்று பெண்ணுரிமைக்குப் பாடுபடும் ெ தாண்டர்கட்கு உயிர்ப்பு ஊட்டுகின்றார். போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டவும், பொற்குழல் ஊதவும் அவர்களைப் பணிக்கின்றார்.

ஆணினம் பெண்ணினத்திற்கு விதித்துள்ள வேலிகளைத் தகர்த் தெறிந்துவிட்டு அவ்வினம் பூட்டிய தளைகளை அவிழ்த்தெறிந்து விட்டுப் பெண்ணினத்தை விடுதலைக் கும்மி"யடிக்குமாறு கட்டளை யிடுகின்றார் கவிஞர்.

கற்பு நிலையென்று சொல்லவக் தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் : வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். 40. ப.பா. பெண்மை - 3. 41. டிை புதுமைப் பெண் - 7 42. ,ை பெண்மை - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/29&oldid=681255" இலிருந்து மீள்விக்கப்பட்டது