பக்கம்:பாரதீயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்க்கியக் கொள்கைகள் 27

முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே

ம்ொய்த்து வணிகர்பல காட்டினர்வந் தே கத்தி நமக்கினிய பொருள்கொணர்ந் து

இம்மருள் வேண்டுவது மேற்கரையிலே பட்டினில் ஆடையும் பஞ்சில் உடை யும்

பண்ணி மலைகளென வீதிகுவிப் போம் கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்

காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்

என்ற பாடற்பகுதிகளில் உற்பத்திப் பெருக்கத்தையும் வாணிகம் செய்ய வேண்டுமென்பதையும் வற்புறுத்துவதைக் காணலாம்.

கவிதைச் சுவை : கவிதையைக் கனிவித்துப் படிப்போருக்கு இன்பத்தை அளிப்பது அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. அவ் வுணர்ச்சியால் உள்ளம் பூரிக்கும்பொழுது பொங்கிவரும் இன்பமே சுவை” எனப்படும் : வடமொழியாளர் இதனை ரஸம் என்பர் : மனம் உணர்ச்சியால் பூரித்திருக்கும்பொழுது அதில் ஒர் ஒளி வீசும். அதுவே இன்பம்: அதுவே ஆன்மஒளி. ஆன்மா அங்குத்தான் பிரதி பலிக்கின்றது. அங்கிலையை அடைவதற்கு மனம் சலனமற்றிருத்தல் வேண்டும். அந்த அசைவற்ற கிலை மனத்திற்குப் பலவிதங்களில் உண்டாகலாம், யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி நிலைநிறுத்திச் சமாதி நிலையை அடைகின்றனர். நம்போலியர் காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் உன்ளம் பூரிக்கும்பொழுது இந்த இன்பநிலையை எய்துகிறோம். இதுவே ரஸமாகும்.

நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் கின்றுவிடு கின்றன. ஆகவே, ரசத்தைப் பாகுபாடு செய்வது இயலாத தாகின்றது. சுவை நிறைந்த மாம்பழத்தைத் தின்ற ஒருவன் அதன் சுவையைப்பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆனால், அதன் சுவையைப் பிறர் உணரச்செய்வது இயலாது. பிறரும் அம் மாம்பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி அதன் சுவையை உணர முடியாது. ரஸ்மும் அந்த வகையைச் சார்ந்தது. ஏலம் ஒருவருடைய அநுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக்கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் ரஸ் நிலையை வைத்துக்கொண்டு அதனை வகுத்துக்காட்ட முற்படாமல் ரஸத்திற்கு முன்னிலை யாகின்ற உணர்ச்சிகளை வைத்து ரஸங்களையும் பிரித்தனர். அவர்கள் உணர்ச்சிகளை ஒன்பதாக வகுத்துள்ளனர். அவை சிருங் காரம் (உவகை), கருணம் (அழுகை), வீரம் (பெருமிதம்), ரெளத்திரம் (வெகுளி), ஹாஸ்யம் (நகை), பயானகம் (அச்சம்), பீபத்லம் (இனி வரல்), அற்புதம் (மருட்கை), சாந்தம் (நடுவுநிலை) என்பனவாகும். கமது மனத்தில் தோன்றக்கூடிய எண்ணற்ற உணர்ச்சிகள் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/43&oldid=681271" இலிருந்து மீள்விக்கப்பட்டது