பக்கம்:பாரதீயம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதீயம்

ஒன்பது பிரிவுகளுக்குள் அடங்கும் என்பது அவர்கள் கருத்து : அவற்றிற்குப் புறம்பான மன நிலையே இல்லை என்பது அவர் களுடைய துணிபு.

பாரதியார் இந்தச் சுவைகளைப் பாமரரும் கல்விக் குறை வுள்ளவர்களும் துகருமாறு தம் பாடல்களை யாத்தார் : பொது மக்கள் விருப்பார்வத்தையொட்டிப் பல்வேறு பொருள்களைப் பற்றியும் பாடினார். பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் அவரே கூறுவார் : எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், இவற்றினையுடைய காவியம் ஒன்று தற் காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷ நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள கயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.” இந்தக் குறிக்கோளில் அவர் தமது படைப்புகள் அனைத்திலுமே வெற்றியடைந்துள்ளார் என்று கருதலாம்.

பாரதியார் தம் கண்ணன் பாட்டில்’’’ இந்தச் சுவைகள் தோன்றுமாறு செய்துள்ளார். - -

வயது முதிர்ந்து விடினும் - எங்தை

வாலியக் களையென்றும் மாறுவதில்லை, துயரில்லை: மூப்பு மில்லை - என்றும்

சோர்வில்லை; கோயொன்றும் தொடுவதில்லை. என்ற பாடற்பகுதியில் அற்புத ரஸம் துளிர்ப்பதைக் காணலாம்.

சாத்திரம் பேசு கிறாப் - கண்ணம்மா!

சாத்திர மேதுக்கடி! ஆத்திரம் கொண்டவர்க்கே-கண்ணம்மா !

சாத்திர முண்டோடி : மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம் ; காத்திருப் பேனோடி?-இதுபார்

கன்னத்து முத்த மொன்று : என்ற பாடலில் சிருங்கார ரளம் கொப்புளிப்பதைக் காணலாம். இங்ஙனமே வேறு பல ரஸங்களையும் அநுபவிக்கலாம்.

இங்ஙனம் பாடல்களை எல்லோரும் எளிதில் அநுபவிக்கும் படியாக இருப்பதால்தான் கவிமணியவர்கள் பட்டிக்காட்டான் ஒருவன் வாய்மொழியாக,

24. கண்ணன் - என் தந்தை 9 25. கண்ணம்மா - என் காதலி.(1)-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/44&oldid=681272" இலிருந்து மீள்விக்கப்பட்டது