பக்கம்:பாரதீயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கொள்கைகள் 3 f

இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க ! (பாரத} என்ற பாடற்பகுதியின் கடை பெருமிதம், எக்களிப்பு போன்ற உணர்ச்சிகள் பீறிட்டு வரச் செய்கின்றது. செந்தமிழ் நாடு’ என்ற பாடலிலுள்ள, -

செந்தமிழ் காடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே. என்ற அடி எழுப்பும் உணர்ச்சி சொல்லுந்தரமன்று. இங்ஙனமே :தமிழ் மொழி பற்றி வரும் பாடல்களின் கடை ஒப்புயர்வற்றது: தமிழைப்போலவே இனிப்பது. கண்ணன் பாட்டு’, பாஞ்சாலி சபதம்’ இவற்றிலுள்ள பல்வேறு நடை விகற்பங்கள் ஈடும் எடுப்புமற்றவை. இங்ஙனமே தோத்திரப் பாக்கள்’ பகுதியிலுள்ள பாடல்களின் நடை உள்ளத்தை உருக்கச்செய்யும் பான்மையுடையவை. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!” என்று வியப்புடன் கவிஞர் இறைவனை நோக்கிப் பேசும்போது படிப்போர்-பாடுவோர்-பாடுவோரைக் கேட் போர்-வியப்புணர்ச்சி கலந்த பாட்டின்பத்தின் கொடுமுடிக்குத் தள்ளப் படுவதை உணரலாம். கடை இதில் பெரும்பங்கு கொள்ளுகின்றது. எளிய நடையே சிறந்த கவிதைக்கு அழகும் பொலிவும் ஊட்டும் என்ற உண்மையை மெய்ப்பித்தவர் பாரதியார். தற்காலக் கவிஞர் கள் தம் காலத்து வாழ்க்கையையும் கவிதைப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்று காட்டினவர் இக்கவிஞர் பெருமான். பழமையிலிருந்து புதுமைக்கு மாறிக்கொண்டிருக்கும் தமிழரின் அறிவின் ஒளிக்கு ஒர் உருவமும் இதயத்தின் ஒலிக்கு ஒர் இசைப் பண்பையும் அளித்துக் கவிதை புனைந்தவர். இதனைத் தெளிவாக விளக்கும் முறையில்,

} பாரதி- . புதிய தமிழுக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி ... பண்டிதர்கள் கடத்திச் சென்ற பைந்தமிழ்க் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்த காவல் நிலையம்’ T23 கிஞ்சிவில் பாரதி ஒரு பிள்ளையார் சுழி (கல்கி

விடுமுறை சிறப்பு மலர்-1981)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/47&oldid=681275" இலிருந்து மீள்விக்கப்பட்டது