பக்கம்:பாரதீயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கடவுள் சமயக் கொள்கைகள்

இவ்வுலகையும் பல்லுயிர்களையும் படைத்து அளித்து அழிக்கும் ஆண்டவனை - இச்செயல்களை அலகிலா விளையாட்டாகக் கொண்டு மகிழ்பவனைப்-பற்றிப் பாரதியார் சிக்தித்துள்ளார். காட்டில் நடைமுறையிலுள்ள பல தெய்வ வழிபாட்டை இவர் வெறுக்கவில்லை. இந்த வேற்றுமையில் ஒற்றுமையைக் காண விழை கின்றார். இவர் கருத்துப்படி கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவர். அவரைப்பற்றி,

வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை, அல்லலில்லை அல்லலில்லை அல்லல் இல்லை,

அனைத்துமே தெய்வமென்றால் அல்ல லுண்டோ: என்று கூறுவர். மேலும் அவர்,

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலுமுயிர் வகைமட்டு மன்றி இங்குப்

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயிலளிக்கும் இரவிமதி விண்மீன் மேகம்

மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே இயலுகின்ற சடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்: எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.” என்று உரைப்பர். நதிகள் யாவும் பலதிசைகளில் சென்றாலும் இறுதியில் ஒரே கடலில் கலப்பதைப் போலவே,பல வேறு சமயங்கள் கூறும் நெறிகள் பலவாக இருப்பிலும் இறுதியில் ஆண்டவன் ஒருவனையே சேரும் வழிகளாக அமைகின்றன என்று பண்டைப் பெரியோர்கள் கூறும் உண்மை பாரதியாருக்கு உடன்பாடேயாகும்.

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனும் வேதமெலாம் - என்றும் ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயோ?” என்பது பாரதியாரின் சுருக்கமான கடவுட் கொள்கையாகும், அக்தக் கடவுளை யடைவதற்கு, .

1. பாரதி அறுபத்தாறு - 15 2. டிை - 18 3. வே. பா : அறிவே தெய்வம் - 10 Lir–3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/49&oldid=681277" இலிருந்து மீள்விக்கப்பட்டது