பக்கம்:பாரதீயம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* †

சென்று, தம் விடாமுயற்சியால் பத்தாண்டுகள் தனி நின்று முயன்று, திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் (தமிழக அரசு மானியத்தைக் கொண்டு) தமிழ்த்துறையைப் புதிதாக நிறுவி, அதன் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி, அதனைப் பேரும் புகழும் பரவ அதனை நன்கு வளர்த்து, ஆய்வுப் பணிகள், கருத்தரங்குகள் முதலிய பல நற்பணிகள் புரிந்து, பதினேழு ஆண்டுகள் தமிழை அப்பல்கலைக் கழகத்தில் ஆல்போல் விரிந்து அருகுபோல் வேரூன் றச் செய்துவிட்டு ஒய்வு பெற்றவர். ஒய்வு பெற்ற பிறகும் ஒன்றரை யாண்டுகள் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். உழைப்பின் உருவமாகத் திகழும் பேராசிரியர் ரெட்டியார் அறிவியலையும் அருளியலையும் இணைக்கும் பைந்தமிழ்ப் பாலமாக நிலவி இவர் படைத்துள்ள நூல்களின் எண்ணிக்கை இவர் வயதோடு ஐம்பத்தெட்டை எட்டிப் பிடித்துவிட்டது (இவர் வயது 66). தம் வாழ்வின் அநுபவங்களையும் தாம் பயின்ற நூல்களின் துண்பொருள்களையும் இணைத்து ஆற்றொழுக்காக, படிப்போர் கெஞ்சைப் பிணிக்கும் வண்ணம், நேருக்கு நேர் கின்று பேசுவதைப் போல் எளிய இனிய தமிழில் விரிவாகவும்.சுவையாகவும் எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாகும்.

“பாரதீயம் என்ற இந்த நூலின் பெயர்க் காரணத்தை, எடுத்த எடுப்பிலேயே பொருத்தமுற எடுத்துரைக்கின்றார் இப்பெரும் பேராசிரியர்.

கொள்கை அல்லது கொள்கைகளைத் தமக்கே உரிய முறையில், பிறர் கூறாத வகையில் ஒருவர் கூறுவது அவர்தம் தனிச் சிறப்பாகும். மொழி, இலக்கியம்பற்றிய கொள்கை களைத் தொகுத்தும் வகுத்தும் கூறினார் தொல்காப்பியர். அவர் கூறிய துரல் தொல்காப்பியம்’ எனப் பெயர் பெற்றது. அக் நூலுக்குத் தமக்கே உரிய முறையில் உரை கண்டார் நச்சினார்க் கினியர் : அது நச்சினார்க்கினியம்’ என்ற திருநாமம் பெற்றது. இங்ஙனமே சேனாவரையரின் அந்நூலுக்குரிய உரை சேனா வரையம்’ என்ற பெயரால் வழங்குகின்றது. இத்தகைய ம பி ைன ப் பின்பற்றிச் சில கொள்கைகளைப் பாரதியார் தமக்கே உரிய முறையில் கூறுவதைப் பாரதியம் என்று வழங்கலாமல்லவா ?'(பக். 1).

காலாவிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் திருவாய் மொழி குறித்து ஆய்ந்து ஆங்கிலத்தில் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/6&oldid=681289" இலிருந்து மீள்விக்கப்பட்டது