பக்கம்:பாரதீயம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

டாக்டர் ஒளவை நடராசன், (இயக்குநர், மொழியாக்கத்துறை, தமிழ்நாடு அரசு)

ஆவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்

தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

வசையென்னாற் கழிந்த தன்றே !

என்று பெருமிதத்துடன் - என் எக்களிப்புடன் - கூறிக்கொண்ட பெருங்கவிஞர் பாரதியின் நூற்றாண்டு விழா மாங்லமெங்கும் கொண்டாடப்பெற்றது. தமிழக அரசே இதனைத் தன் பொறுப்பில் மேற்கொண்டது. கவியரசர் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தையே நிறுவித் தன் புகழை நிலை நிறுத்திக்கொண்டது. பாரதியாருக்கு அறிவுலகம் சூட்டிய புகழ்மாலைகளின் நறுமணம் காற்றில் கலந்த கர்ப்பூசம் போலாகாமல், ஆற்றில் கரைத்த புளி போலாகாமல், அச்சு வடிவம் கொண்டு வெளி வந் துள்ளன. அவற்றுள் பாரதியாரை மிகுந்த ஆர்வத்தோடு பாராட்டி மகிழும் நூல்கள் பல ஆற்றலோடு ஆராய்ந்து போற்றும் நூல்கள் சில ...இரண்டாவது வகையைச் சார்ந்தது பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களின் பாரதீயம். பாரதியாரின் நூற்றாண்டில் அவர்தம் முப்பெரும் பாடல் களைப்பற்றித் தனித்தனியே மூன்று திறனாய்வு நூல்களைத் திறம் பட எழுதி வெளியிட்டுத் தம் போக்கில் கவிஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியவர் இப்பேராசிரியர். இவற்றிற்கும் மேலாகத் பாரதியார் கவிதைகள் முழுவதையும் சாரமாகப் பிழிந்து வழங்கும் பெருநூலே பாரதீயம் என்னும் இந்நூல்.

பேராசிரியர் ரெட்டியார் தமிழுலகம் நன்கறிந்த பேரறிஞர். துறையூரில் ஒர் உயர்நிலைப்பள்ளியை நிறுவிஅதன் தலைமையாசிரிய ராகத் தம் கல்விப் பணியைத் தொடங்கிப்பத்தாண்டுகள் அதனைப் பால் கினைந்துட்டும் தாயினும் சாலப் பரிந்து வளர்த்துவிட்டபிறகு: காரைக்குடி வள்ளல் அழகப்பர் நிறுவிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி யில் தொடக்கம் முதல் பத்தாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவ ராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி, அதன் பிறகு, திருப்பதி

கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/5&oldid=681278" இலிருந்து மீள்விக்கப்பட்டது