பக்கம்:பாரதீயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 53

வேதம் பாடிய சோதியைக் கண்டு

வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்; நாத வார்கட லின்னொலி யோடு

கற்ற மிழ்ச்சொல் இசையையும் சேர்ப்பேன்; காத மாயிரம் ஒர்கனத் துள்ளே

கடுகி யோடும் கதிரினம் பாடி ஆத வா:கினை வாழ்த்திட வந்தேன் ;

அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே ??

என்று பாடி மகிழ்வதைக் காண்க. கதிரவனையன்றி, கதிரினம்’ என்று கதிரவ மண்டலததிலுள்ள அனைத்தையும் கினைந்து பாடுவதால் நம்மனோர் மேற்கொண்டு வரும் நவக்கிரக வழிபாடு இவர் சிந்தை யிலிருந்து கொண்டு இங்ஙனம் பாடச் செய்ததோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

கதிரவன் எழுந்ததும் உறங்கிக் கிடந்த இய ற்கையன்னையும் விழிக்கின்றாள். வானமெங்கும் படர்ந்து வரும் ஒளியினைக் கண்டு புட்கள் மகிழ்வுடன் பாடிக் களிக்கின்றன. கடலின்கண் உள்ள ஒவ்வொரு நுண்துளியிலும் கதிரவன் வடிவு காணப்படுவதால் கடல் கதிரவனைச் சுருதி பாடி,எற்றும் திரைகளால் தாளம்போட்டுக் களிக் கின்றது. இதனைச் சிந்தித்த கவிஞர்,

என்ற னுள்ளங் கடலினைப் போல எந்த நேரமும் கின்னடிக் கீழே நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும் நின்றன் சோதி நிறைந்தது வாகி கன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!

ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா! மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா: என்றுதானும் கடலின் நிலையை அடைந்து மகிழ வேண்டும் என்று: ஆதவனை வேண்டுகின்றார்; அந்நிலையைத் தனக்கு கல்குமாறு: வேண்டி அவனை வணங்குகின்றார். .

காதல் கொண்டனை போலும் மண்மீதே

கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே! மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்

மண்டி னாள்,இதில் ஐயமொன் றில்லை.

AASAASAAAS

72. தோ.பா : 69. சூரிய தரிசனம்-2 73. .ை 70. ஞாயிறு வணக்கம்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/69&oldid=681299" இலிருந்து மீள்விக்கப்பட்டது