பக்கம்:பாரதீயம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் - சமயக் கொள்கைகள் 55

பிராணிகள் யாவும் கதிரவன் காலும் வெப்பத்தையும் ஒளியையும் விழுங்காமல் அவற்றை விழுங்கிய தாவரங்களை விழுங்கிக் கதிர வனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற புலா லுண்ணும் விலங்குகளோ கதிரவனின் ஆற்றலை நேரே விழுங்குவது மில்லை; தாவரங்கள் உண்டாக்கும் பொருள்களையும் விழுங்கு வதில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்று கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. எனவே, இப்புவியிலுள்ள பிராணிகள் அனைத்தும் பகலோனிடமிருந்தே ஆற்றலைப் பெறு கின்றன என்பது வெள்ளிடை மலை. இக்கருத்துகள் யாவும் மேற் குறிப்பிட்ட பாடலில் அமைந்து கிடப்பதைக் கண்டு மகிழ்கின்றோம். இந்த அறிவியல் உண்மையை அநுபவமாகக் கண்ட இளங்கோ வடிகள் தாம் இயற்றிய காவியத்தில் ஞாயிற்றினை மங்கல வாழ்த்துப் பாடலாகப் போற்றுகின்றார்: கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பில் திளைத்த நக்கீரர் பெருமானும், கதிரவனை நினைத்து தம் திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகின்றார். இந்த அறி வியல் உண்மையை கிதர்சனமாகக் கண்ட பாரதியாரும் கதிர வனையும், கிலமகளையும் காதலன்-காதலியாகக் காண்கின்றார்.

மேலும், பாரதியார் கதிரவனை ஞானத்தின் உருவாகவும் காண் கின்றார். ஆதவனிடமிருந்துதான் அதுமான் எல்லாக் கலை களையும் கற்றான் என்ற புராண வரலாறும் இதனைத்தான் கூறு கின்றது என்று கருதலாம். இதனால்தான் பாரதியார் கதிர்வனை ஞானபாது என்று போற்றுகின்றார். ஆதலால்தான்,

பண்ணிய முயற்சி யெல்லாம்

பயனுற வோங்கும், ஆங்கே எண்ணிய எண்ண மெல்லாம்

எளிதிலே வெற்றி யெய்தும்; திண்ணிய கருத்தி னோடும்

சிரித்திடு முகத்தி னோடும் கண்ணிடும் ஞான பாது

அதனைநாம் நன்கு போற்றின். .

என்று ஆதவனை ஞானபாதுவாகக் காண்கின்றார்.

தீ ஐம்பெரும் பூதங்களில் கிலத்தைப் பூமி தேவி என்ற பெண்ணாகவும், காற்றை வாயு தேவனாகவும், தீயை அக்கினித் தேவ னாகவும், ைேர வருணதேவனாகவும் உருவகித்துப் போற்றியுள்ளனர். தி வழிபாட்டைப்பற்றித் திருமறைகள் பேசுகின்றன. பாரதியார் தீயை அறிவுக் கொப்பிட்டு அதனைப் போற்றுகின்றார். ஞானச் சுடர்’

75. தோ.பா : 71. ஞான பாது-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/71&oldid=681302" இலிருந்து மீள்விக்கப்பட்டது