பக்கம்:பாரதீயம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாரதீயம்

என்ற வழக்கினை எண்ணுக. பாரதியார் தீயைச் செங்கதிர் வானவன்” என்று உருவகிக்கின்றார். இவன் தீமையை அழிப்பவன் என்றும், கன்மைகள் பல நல்குபவன் என்றும், உருத்திரனின் அன்புத் திருமகன் என்றும் பேசுகின்றார். இந்த அறிவுத் தெய்வம் கெஞ்சின் கவலைகள், நோய்கள் இவற்றைப் போக்கி நீண்ட ஆயுளை அளிக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். இந்தத் தெய்வத்தைக் கூட்டாக வழிபடுவதற்கு மக்கட் கூட்டத்தை அழைக்கின்றார். வேள்வித் தீ பாரதியாரின் வழிபாட்டுக்குரியதாகின்றது. இராம லிங்க அடிகளின் ஜோதி வழிபாடு ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

அனைத்தையும் தேவர்க் காக்கி

அறத்தொழில் செய்யும் மேலோர் மனத்திலே சக்தி யாக

வளர்வது நெருப்புத் தெய்வம் தினத்தொளி ஞானம் கண்டிர்

இரண்டுமே சேர்ந்தால் வானோர் இனத்திலே கூடி வாழ்வர்

மனிதரென் றிசைக்கும் வேதம் 78 என்று கவிஞர் நெருப்புத் தெய்வம் மனிதர்களைத் தேவர்களாக்கு வதைக் காட்டுவர். ஆண்டவனைப் பரஞ்சோதி என்று சமயச் சான்றோர்கள் குறிப்பிடுவதையும் ஈண்டுச் சிந்தித்தல் தகும்.

iii இறைவனை அடையும் நெறிகள் இனி இறைவனை அடைவதற்குப் பாரதியார் காட்டும் நெறி களைச் சிந்திப்போம்.

சரணாகதி நெறி சமயச் சான்றோர்கள் காட்டிய சரணாகதி தத்துவம் பாரதியாரையும் ஆட்கொண்டு விடுகின்றது. கவிஞர் பரா சக்தியைச் சரணம் அடைகின்றார். ஒரு பாடலில்,

தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச் சிந்தையிற் குலவிடு திறத்தாள், வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்

விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.?? என்று அன்னையிடம் சரண் புகுவதைக் காண்க. முத்துமாரியும், தேச முத்துமாரியும் பராசக்தியின் வேறு வடிவங்கள். இதனை கன் குனர்ந்த கவிஞர்,

உலகத்து நாயகியே!-எங்கள் முத்து மாரியம்மா! எங்கள் முத்துமாரி: 76. டிை : 71. ஞானபாது-3 77. .ை:33. மகாசக்தி பஞ்சகம்-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/72&oldid=681303" இலிருந்து மீள்விக்கப்பட்டது