பக்கம்:பாரதீயம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

7

கடவுள் - சமயக் கொள்கைகள்

உன்பாதம் சரண்புகுந்தோம்,-எங்கள் முத்து.

மாரியம்மா, எங்கள் முத்துமாரி: என்று முத்துமாரிக்கும்,

தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி: கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாப் பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாம் களைவாப் கோடிகலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்” என்று தேசமுத்து மாரிக்கும் சரண் புகுவதைக் கண்டு மகிழலாம். இதே பாடலில் இச்சரணாகதி தத்துவத்தை,

கம்பினோர் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு, அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். என்று மீண்டும் வலியுறுத்துவதைக் கண்டு மகிழ்க

பக்தி நெறி : வைணவ தத்துவத்தில் முடிந்த முடிபாக, எளிய வழியாக, மேற்கொள்ளப்பெறுவது பிரபத்தி நெறி (சரணாகதி மார்க்கம்) என்பதை நாம் அறிவோம். எனினும், சற்றுக் கடினமாக வுள்ள பக்தி நெறியும் அங்கு மேற்கொள்ளப்பெறுகின்றது. இது போலவே பாரதியாரும் சரணாகதி தத்துவமேயன்றி பக்தி என்ற ஒரு வழியினையும் குறிப்பிடுகின்றார். பக்தி'லயென்ற பாடலொன்றில் பக்தியினால் பாரினில் எப்திடும் மேன்மைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். பக்தியினால் சித்தம் தெளியும் : செப்கையனைத் திலும் செம்மை பிறந்திடும் வித்தைகள் சேரும் : மனத்திடைத் தத்துவம் உண்டாகும் : நெஞ்சில் சஞ்சலம் நீங்கி உறுதி விளங் கிடும். பக்தியினால் காமப் பிசாசு, தாமதப் பேய், தேம்பல் பிசாசு ஆகியவற்றை யெல்லாம் வெருட்டி அனுப்பிவிடலாம்: பக்தி வளர்வதால் ஆசைகள் அழியும் : அச்சம் அகலும் : பாசம் அறுக்கப்பெறும் : சோர்வுகள் போகும் : பொய்ச் சுகம் அகன்று மெய்ச் சுகம் பெற வழி அமையும் : பல செல்வங்கள் வளர்ந்து மகிழ்ச்சி விளைந்திடும் ; பிணிகள் தீர்ந்து இன்பங்கள் சேர்ந்திடும். ஒருவரிடம் பக்தி இடம் பெற்றால் அவரிடம் கல்வி வளரும் : பல காரியங்கள் கைகூடும் வீரியம் ஓங்கிடும் : அல்லல் போம் ; வல்வினை போம் : நல்ல ஆண்மை உண்டாகும் : அறிவில் பளிங்கு போன்ற ஒரு வகைத் தெளிவு பிறக்கும் : சொல்லுவதெல்லாம் திருமறைச் சொல்லினைப்போல் ப யன் உள்ளதாகும் சோம்பல் அழியும் ; உடல் சொன்னபடி இயங்கிடும் :

78. .ை 40. முத்துமாரி-1 79. .ை 41. தேச முத்துமாரி-1,2 80. வே. பா. 15. பக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/73&oldid=681304" இலிருந்து மீள்விக்கப்பட்டது