பக்கம்:பாரதீயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்களை உண்டாக்கிக்கொண்டு தாய்மொழியில் கற்பித்தலைத் தொடங்கவேண்டும் என்று நினைப்பது, நீந்தக் கற்றுக்கொண்ட பிறகு நீரில் இறங்கவேண்டும் என்று எண்ணு வது போலாகும். செயலில் இ றங்கினால்தான் அனைத்தும் சிர்படும். தார் சாலை அமைப்பதற்கு முன்னர் மண்சாலை, மண்ணும் பெரிய சல்லிகளும் கலந்த சாலை, மண்ணும் சிறிய சல்லிகளும் கலந்த சாலை என்றிப்படிப் பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளதல்லவா ? இக்கிலையைத் தாய்மொழி பயிற்றுமொழியாக அமைவதிலும் சந்திக்க நேரிடும்” (பக். 160).

பாரதியாரின் வசன கவிதைகளை’ ஆராயும் போக்கில் பேராசிரியர் ரெட்டியார் கூறுவார் :

“நாம் வாழ்வது அறிவியல் தொழில் நுட்பக் காலம். தட்டச்சுப்பொறி, அ ச்சுப் பொறி, அச்சுப்பொறிகளிலும் பல்வேறு நுட்ப வகைகள்-இவை எழுதுவதற்குத் துணையாக அமைந்துவிட்டன. செவிப்புலன் ஆட்சியைவிடக் கட்புலன் ஆட்சி மிகுந்துவிட்டது. எவற்றையும் நினைவில் நிறுத்தித் “தலைக்கணம் செய்யவேண்டிய இன்றியமையாமை இல்லாது போய்விட்டது. கல்வி முறையிலும் கெட்டுருச்செய்து நினைவி விருத்த வேண்டிய முறை தளர்ந்துவிட்டது. தகர்ந்தே போய் விட்டது என்றுகூடச் சொல்லலாம். வாய்விட்டுப் படித்தல் குறைந்து வாய்க்குட் படித்தல் செல்வாக்கு அடைந்துவிட்டது. ஒரே அறையில் - பெரிய மண்டபத்தில் - பலர் இருக்கைகளில் அமர்ந்து கல்லாவின் புடை அமர்ந்துள்ள தென்முகக் கடவுள் போல்’ நூல்களிலும் வார; பிறை, திங்கள் இதழ்களிலும் ஆழங்கால் பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள் ளாக் காட்சியாக இருப்பதை நூலகங்களில் காணலாம். (பக். 116). -

இக்துரலில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ள இலக்கிய ஆராய்ச் சிக்கு ஒர் அறிமுகம் என்ற ஆங்கில நூலில் அட்சன் என்ற திறனாய்வுப் பேராசிரியர் கூறும் இலக்கியக் கொள்கைகள்பற்றிய மேற்கோள் பாரதீயம் என்ற இந்நூலுக்கும் பொருந்தும் :

கவிதையை ஆராயுங்கால். நம்முடைய முதற்கவனம் கவிஞன்பால் செல்லவேண்டும் அவன் ஆளுமையிலும் அவன் உலகைப்பற்றிக் கொண்டுள்ள மனப்பான்மையிலும் செல்ல வேண்டும் வாழ்க்கையை எவ்வாறு நோக்கி விளக்கந் தருகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/8&oldid=681312" இலிருந்து மீள்விக்கப்பட்டது