பக்கம்:பாரதீயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாரதீயம்

இதனைத் தொடர்ந்து புதுக்கவிதையாக மலர்வதற்கு இஃது ஒரு விடியற்குறியீடு என்று கருதுவதில் தவறு இல்லை.

காலைப் புனைவு ; குயில் பாட்டில் இப்புனைவு அதி அற்புத மாக அமைந்து பாடியவாய் தேனுறச் செய்கின்றது. எழு ஞாயிற்றின் எழில் இது.

தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான் வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஒதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணையினி தென்றுரைப்பார் கண்ணுக்குக் கண்ணாகி விண்னை அளக்குமொளி மேம்படுமேசர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரு மஃதோர் விரியுமொளி என்பாரேல் கல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். கரமும்தான் நாள்தோறும் காலை நேரத்தைக் காண்கின்றோம். கவிஞரின் இந்த அது பவத்தைப் பெறமுடிகின்றதா? இதைப்படித்த பின் காம் முயன்றால் ஓரளவு கவிஞரின் இந்த அறுபவத்தை எட்டிப் பிடிக்கலாம். திருவல்லிக்கேணிக் கடற்கரையில் கண்ணகி சிலை யினருகில் அமர்ந்துகொண்டு இந்த அநுபவத்தைப் பெற முயல் வோமாக.

மாலைப் புனைவு : படு ஞாயிற்றின் எழிலை - மாலை நேரக் காட்சியை-மிக அற்புதமாகக் காட்டுகின்றார் கவிஞர். பாஞ்சாலி சபதத்தில் இக்காட்சியைப் பார்த்தன் பாஞ்சாலிக்குக் காட்டும் பாங்கில் அமைந்துள்ளது. அருச்சுனன் பேச்சு இது : பண் மொழியே, வானத்தின் புதுமையைக் காண்பாயாக. கணந்தோறும் மாறி மாறி ஒன்றுக்கொன்று ஒவ்வாமல் புதிது புதிதாகத் தோன்று வதைக் கண்டு மகிழ்வாயாக ; இக்காட்சியைப்போல் இங்கிலவுலகில் எண்ணரிய பொருட்செலவில் யாரால் இயற்ற முடியும் ? பழவேத முனிவர் போற்றும் செழுஞ்சோதி வனப்பெல்லாம் ஒரு சேர அமைக் திருப்பதைக் காண்பாயாக. கணந்தோறும் வியப்புகள் புதியனவாகத் தோன்றுகின்றன : கணந்தோறும் வெவ்வேறு கனவுகள் தோன்று கின்றன : கணந்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றுவதைக் கண்டு அதுபவிப்பாயாக. இதனை மனத்தினால் சிந்திக்கவும்

23. குயில்பாட்டு - இருளும் ஒளியும். அடி (31-43)

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/86&oldid=681320" இலிருந்து மீள்விக்கப்பட்டது