பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்று குறிப்பிடுவதைக் காண வேண்டும்". பொது தர்மங்களும் குறிப்பிட்டதனிதர்மங்களும் இந்து சாத்திரங்களில் சில பொதுவான தர்மங்கள், கடமைகள், நெறிமுறைகள், ஒழுக்கங்கள் முதலியவை கூறப்பட்டிருக்கின்றன.அவை எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. இத்தகைய ஒழுக்கங்கள் பலவும் இந்திய சாத்திரங்களில் மட்டுமல்ல, உலகின் இதர பல சமய நூல்களிலும், பொது நூல்களிலும், இலக்கியங்களிலும் கூறப் பட்டிருக்கின்றன. உண்மை பேச வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாது. சுத்தமாக இருக்கவேண்டும், புலனடக்கம் கொள்ள வேண்டும். யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது. ஈதல், இரக்கம், காட்டுதல், எளிமையாக இருத்தல், சிக்கனமாக இருத்தல், எதையும் வீணாக்காமல் இருத்தல், கோபம் கொள்ளாதிருத்தல், பொறாமை கொள்ளாதிருத்தல், எல்லோரிடமும் அன்பாக இருத்தல் மனிதன் தனது சக மனிதர்களிடத்திலே காட்ட வேண்டிய பண்பு, வாழ்க்கை நெறிமுறை, குழந்தைகளிடம் அன்பு காட்டுதல், பெரியவர்களிடம் மரியாதையும், பிரிவும் காட்டுதல், தாயன்பு. தந்தையிடம் மரியாதை சகோதர பாசம், அன்பு, பரிவு, பாச உணர்வு. இத்தியாதி இத்தியாதி நெறிமுறைகள் பல நூல்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டும் அறிவுறுத்தப் பட்டும் உள்ளன. போதனைகளில் கூறப்படுகின்றன. கதைகள் மூலம் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. பாரதி காலத்தில் பாரத நாடு அன்னிய ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தட்டி எழுப்பப் பொருந்துவதுமான பல தர்மங்களையும் கடமைகளையும், அறநெறிகளையும், ஒழுக்க நெறிகளையும் மிகுந்த உள்ளுணர்வுடன் நாட்டுப் பற்றுடன், மனித நேயத்துடன், நமது பண்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும், நடைஉடை பாவனைகளிலும் திளைத்து வேர் ஊன்றி, தெய்வங்களை வேண்டி வரமாகக் கேட்கிறான். தனது சொந்த ஆணையாகவும் கட்டளை இடுகிறான். பாரதி தனது பாப்பாப் பாட்டு மூலம் பொய் சொல்லக் கூடாது. புறம் சொல்லல் ஆகாது. பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது. துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்திடலாகாது. சோம்பல் மிகக் கெடுதி, தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே. உயிர்களிடத்தில் அன்பு வேனும், வயிரமுடைய நெஞ்சு வேணும் என்று எக்காலத்திற்கும் பொருந்துவதான பொதுக் கருத்துக்களை நெறிகளை எடுத்துக் கூறுகிறார். | பாரதி புதிய ஆத்திசூடி என்னும் தலைப்பில், அச்சம் தவிர், ஆண்மை தவறேல், உடலினை உறுதி செய், எண்ணுவது உயர்வு ஏறு போல் நட ஐம்பொறி ஆட்சி கொள், ஓய்தல் ஒழி, கூடித் தொழில் செய், கொடுமையை எதிர்த்து நில், செய்வது துணிந்து செய், தீயோர்க்கு அஞ்சேல். நன்று கருது, நேர்படப்பேசு, புதியன விரும்பு, யாரையும் மதித்து வாழ், வீரியம் பெருக்கு. வேதம் புதுமை செய் முதலிய பழையன புதியனவான நெறிகளை மிகவும் துல்லியப்படுத்திக் கூறுகிறார். பாரத நாடு என்னும் பாடலில் 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று தொடங்கி, ஞானம், பரமோனம், உயர்மானம், கானம், தீரம், படைவீரம், நெஞ்சில் ஈரம், நன்மை, உடல் வன்மை, செல்வப்பன்மை, மறத்தன்மை, கற்பு ஆக்கம், தொழில் ஊக்கம், புய வீக்கம், உயர் நோக்கம், வண்மை, உளத்திண்மை, மதி நுண்மை முதலிய பாரத நாட்டின் சிறப்புத் தண்மைகளை பொதுமைப்படுத்திப் பாரத நாட்டினைப் பெருமைப் படுத்திப் பேசுகிறார். இவை இக்காலத்திற்கும், எக்காலத்திறகும் பாரத நாட்டிற்குப் பொருந்தும் பொதுப் பண்புகளாகும். சிறப்பு குணங்களாகும். இந்தியப் பண்பாட்டு தளத்தின் சிறப்புதர்மங்களாக தனித்தன்மையான கடமைகளாக ஆசிரம தர்மங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரமங்கள் என்பது பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு பிரிவுகளாக விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதன் பிறந்து குழந்தைப் பருவம் முடிந்தவுடன் மாணவப் பருவம் தொடங்குகிறது. மாணவப்பருவம் (பிரம்மச்சரியம்) முடிந்த பின்னர் கிரகஸ்தம் (இல்லறம்) தொடங்குகிறது. இல்லற ஆசிரமம் முடிந்த பின்னர், வாழ்க்கையின் நேரடிப் பொறுப்புகளிலிருந்து படிப்படியாக விலகி, அடுத்த தலைமுறைக்கு வழி காட்டி உதவி செய்யும் வானப் பிரஸ்தம் தொடங்குகிறது. வானப்பிரஸ்தப் பணிகள் முடிந்த பின்னர், வாழ்க்கைச் சுமைகளை விடுவித்துக் கொண்டு சந்நியாசம் அதாவது முழுமையான துறுவறம் கொண்டு இறுதியில் மோட்சம் (வீடுபேறு) வாழ்க்கையிலிருந்து முழு விடுதலை பெற வேண்டும் என்பதை இந்து தர்ம சாத்திரங்கள் விளக்கிக் கூறுகின்றன. இந்த தர்மங்கள் இக்காலத்தில் இருபாலருக்கும் பொருந்துவதாகிறது. இதில் சிற்சில விளக்கங்களும் அவசியமாகிறது. மாணவப் பருவத்தில் (பிரம்மச்சரிய ஆசிரமத்தில்) குருவினிடமிருந்து கல்வி கற்றல், இக்காலத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வி கற்றல், சகல கலைகளிலும் பயிற்சி பெறுதல், பொதுக்கல்வியும், வாழ்க்கைக்கல்வியும் சிறப்புக் கல்வியும் பெறுதல், அவைகளில் நன்கு தேர்ச்சி பெறுதல், சிறந்த மனிதனாக அறிவு. ஆற்றல், உடல், பலம் முதலிய சிறப்புகளைப் பெற்றுப் பக்குவமடைதல் ஆகியவை முக்கிய கடமைகளாக, சிறப்பு தர்மங்களாகக்