பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கீதை எழுதப்பட்டது" என்று பாரதி குறிப்பிடுகிறார். இதுவே வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றிய, பாரதியின் தெளிவான கருத்தாகும். வாழ்க்கை இன்பங்களை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்பதை பாரதி வலியுறுத்துகிறார்.அப்படியானால் மனித வாழ்க்கைக்குரிய அதற்கு அவசியமான எல்லா பொருள்களும் உற்பத்தி செய்யப் பட வேண்டும். தேவையான அளவு இன்னும் அதிகமாக அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை நமது சாத்திரங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. உயிர் வாழ்வதற்கான உணவு, உடை, உறைவிடம் முதலியவை மட்டுமல்லாமல், மனித வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவதற்காக நாடகம், சினிமா, வானொலி, தொலைக்காட்சி, சங்கீதம், கவிதை, கல்வி, கல்வி கற்பதற்கான கல்வி நிலையங்கள், அதற்குரிய சாதனங்கள், வசதிகள், விளையாட்டு வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள், நூல்கள் மன்றங்கள், நூல் நிலையங்கள், படிப்பகங்கள், வைத்திய வசதிகள், வைத்திய சாலைகள், மருந்துகள், மருந்தகங்கள், சுகாதாரம், குடி தண்ணி, கோயில் குளங்கள் திருவிழாக்கள், கலை இலக்கிய சாதனங்கள் முதலியனவும் மற்றும் அவைகளுக்கு துணையான, மூலாதாரமான பல பொருட்களும் அவசியமானதாகும். அவைகள் எல்லாம் ஆக்கப்பட வேண்டும், படைக்கப் பட வேண்டும். உற்பத்தி செய்து குவிக்கப் பட வேண்டும். மனித குலத்திற்கும் இதர ஜீவராசிகளுக்கும் தேவையான முதல் நிலை உற்பத்திப் பொருள்கள் நிலம், கடல், சுரங்கம், மலை, காடுகள் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கின்றன. அத்துடன் மனித வளம் மனித ஆற்றல் மிக முக்கியமான உற்பத்தி சாதனமும், ஆதாரமுமாகும். - கம்பன் கோசல நாட்டின் வளத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது மிகச் சிறப்பாகப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். "கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா நிலம் சுரக்கும் நிறை வளம் நல்மணி பிலம் சுரக்கும் பெறுவதற்கு அரிய தம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்" என்று பால காண்டம் 70 ஆவது பாடலில் கம்பர் குறிப்பிடுகிறார். கலம் என்பது கடலும் கப்பல்களும். நிலம் என்பது விளை நிலங்களும், காடுகளும், மலைகளும், ஆறுகளும். பிலம் என்பது சுரங்கங்கள். குலம் சுரப்பது மனித வளம். 18 இவைகளே மனித குலத்திற்கும் இதர ஜீவராசிகளுக்கும் தேவையான சகலவிதமான சகலவகையான பொருளுற்பத்திக்கும் ஆதாரமாகும். முதல் நிலை உற்பத்தி வளமாகும். வாழ்க்கை வசதிகள் அனைத்தும் வேண்டும் என்பதற்காக அதை எந்த வழியிலும் சம்பாதிக்க வேண்டும் என்னும் வழிமுறையை பாரதி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சாத்திரங்களும் பாரதப் பண்பாட்டுத் தளமும் அவ்வாறு குறிப்பிடவில்லை. தவறான வழிமுறைகளை பாரதப் பண்பாடு நிராகரிக்கிறது. பாரதியும் தவறான வழிமுறைகளை முற்றிலுமாக நிராகரித்து விடுகிறார். "திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும், தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே" என்பது பாரதியின் வாக்காகும். இன்னும், 'வஞ்ச மற்ற தொழில் புரிந்து வாழும் வாழ்க்கை வேண்டும்" என்பதும், "திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து வருக" என்பதும், 'பயிற்றி உழுதுண்டு வாழ்வீர், பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்" என்பதும் 'தன்னலம் பேணி இழி தொழில் புரியோம்' என்பதும் மகாகவி பாரதியின் கவிதை வாக்குகளாகும். சூதும் வாதும், பொய்மையும் வஞ்சகமும் நிறந்த விலங்கின வாழ்க்கை நிலைக்கு மாறாக சத்தியத்தின் வழியிலான அறவியல், அறிவியல் வாழ்க்கை மனித குலத்திற்கு அமைய வேண்டும் என்பதை பாரதி நமது நாட்டின் மரபு வழியில் நின்று எடுத்துக் காட்டுகிறார். பாரதி காலத்தில் பாரதநாட்டில் அந்நிய ஆங்கிலேயர் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது. அந்த ஆட்சிமுறையில் எல்லாவிதமான தீமைகளும், சூதும், வாதும், பொய்மையும், வஞ்சகமும், ஏமாற்று வித்தைகளும்,