பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. பீனிவாசன் "நீதமெனக் கூடும் நெடுக்காலச் செய்தியது. ஆனோடு பெண் முற்று நிகரெனவே யந்நாளில், பேணி வந்தார் பின்னாளில் இது பெயர்ந்து போய், இப்பொழுதைய நூல்களினை யெண்ணுங்கால் ஆடவருக்" "கொப்பில்லை மாதர் ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம் தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை தன்னையடிமையென விற்ற பின்னும் தருமன்" "நின்னையடிமை யெனக் கொள்வதற்கு நீதியுண்டு செல்லு நெறியறியார் செய்கை யிங்கு பார்த்திடிலோ கல்லு நடுங்கும் விலங்குகளும் கண் புதைக்கும் செய்கை அநீதி யென்று நேர்ந்தாலும் சாத்திரந்தான்" "வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் ஆங்கவையும் நின் சார்பில் ஆகாவகை யுரைத்தேன் தீங்கு தடுக்கும் திறமிலேன் என்றந்த மேலோன்தலை கவிழ்ந்தான்." என்று வீட்டுமன் கூறிய சாத்திர முறைக்குப் பாஞ்சாலி பதில் கூறுகிறாள். கண் கலங்கி நின்று சபை முன் மீண்டும் பேசுகிறாள். "சால நன்கு கூறி னிர் ஐயா, தரும நெறி பண்டோர் இராவணனும் சீதை தன்னைப் பாதகத்தால் கொண்டோர் வனத்திடையே வைத்துப் பின் கூட்டமுறை மந்திரி மார் சாத்திரி மார் தம்மை வர வழைத்தே செந்திருவைப் பற்றி வந்த செய்தி உரைத்திடுங்கால், தக்கது நீர் செய்தீர் தர்மத்துக்கிச் செய்கை, "ஒக்கும்" எனக் கூறி யுகந்தனராம் சாத்திரிமார்," "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் மாய முனராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டது தான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடித்த தொரு செய்கை யன்றோ?' "மண்டப நீர் கட்டியது மாநிலத்தை கொள்ளவன்றோ? பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர், பெண் பாவமென்றோ? பெரிய வசை கொள்வீரோ? கண் பார்க்க வேண்டும்" கையெடுத்துக் கும்பிட்டாள்" இவ்வாறு பாஞ்சாலி அழுது புலம்பினாள். ஆடை குலைந்து நின்றனள், துச்சாதனன் பேச்சுக்கள் பல பேசி அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்தான். இதைக் கண்ட வீமனால் பொறுக்க முடியவில்லை. அவனுடைய கோபம் கரை புரண்டது. அண்ணன் தருமனை நோக்கி ஆவேசமாகப் பேசினான். இந்தக் காட்சியை பாரதி சோகமும் கோபமும் கொண்டு தனது கவிதை வரிகளில் பேசினான். "சூதர்மனைகளிலே - அண்ணே தொண்டு மகளிர் உண்டு சூதிற் பணயமென்றே - அங்கோர் தொண்டச்சி போவதில்லை." "ஏது கருதி வைத்தாய் - அண்ணே யாரைப் பணயம் வைத்தாய் மாதர் குல விளக்கை - அன்பே ҺІІП ம்பந்த வடிவழகை" "பூமியரசரெல்லாம்-கண்டே போற்ற விளங்குகிறாள் சாமி புகழினுக்கே - வெம்போர்ச் சண்டெனப் பாஞ்சாலன் H "அவன் சுடர் மகளை - அண்ணே ஆடியிழந்து விட்டாய் தவறு செய்து விட்டாய் - அண்ணே தருமம் கொன்று விட்டாய்" "சோரத்தில் கொண்டதில்லை - அண்ணே சூதிற் படைத்ததில்லை, வீரத்தினாற் படைத்தோம் - வெம்போர் வெற்றியினாற் படைத்தோம்"