பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கணித்துக் கூறுகிறார். மகாத்மா காந்தி பஞ்சகம் என்னும் தலைப்பில் காந்தியைப் பற்றி பாரதி மிகவும் சிறப்பானதொரு பாடலைப் பாடியுள்ளார். "வாழ்க நீ எம்மான்' என்று தொடங்கி "இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதா மோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்க" என்று உள்ளம் உருகிப் பாடுகிறார். "அடிமை வாழ்வு அகன்று இந் நாட்டார், விடுதலை பெற்று செல்வம், குடிமையில் உயர்வு கல்வி, ஞானமும் வடி ஓங்கிப் படிமிசைத் தலைமை எய்தும் படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய் முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மை பெற்றாய்" என்று காந்தியைப் போற்றிப்பாடுகிறார். மகாத்மா காந்தியின் அரசியல் போராட்ட உத்திகளில் ஒன்று ஒத்துழையாமை இயக்கம். இந்த அறப்போரை முதலாம் உலகப் போர் முடிவுற்ற பின்னர், 1919- 22ம் ஆண்டுகளில் காந்தி துவக்கினார். அதை வரவேற்றுப் பாராட்டி காந்திக்கு வாழ்த்துக் கூறிய பாடலில், பாரதி இந்திரசித்தன் இராமாயணப் போரில் இலக்குவனையும் அவனுடன் இருந்த வானரப்படை வீரர்களையும் தனது நாக பாசத்தால் வீழ்த்தி விட்டான். அனைவரும் மயக்கமடைந்து மண்ணில் சாய்ந்து கிடந்தனர். இந்த மயக்கத்திலிருந்து இலக்குவனையும் வானரப்படை வீரர்களையும் எழுப்பச் செய்வதற்கு அனுமன் உயிர் எழுப்பும் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையைத் தனது ஆற்றலால் சுமந்து கொண்டு வந்தவன். அந்த அனுமனுக்கொப்ப மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் பாரத மக்களைத் தட்டி எழுப்ப, காந்தி ஒத்துழையாமை என்னும் மூலிகையைக் கொண்டு வந்தான் என்று உவமையுடன் கூறும் வகையில், "கொடிய செந்நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவனனென்கோ' என்று காந்தியைப் பாராட்டி தன் கவிதைகளில் பாரதி பாடுகிறார். ஆயர் பாடியை இந்திரன் ஏவலால் இடி மின்னல் மழை தாக்கிய போது கண்ணன்கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து ஆயர் குல மக்களைக் காப்பாற்றியதைப் போல அந்நிய ஆட்சியால் தாக்குண்ட பாரத மக்களைக் காப்பாற்றுவதற்குக் காந்தி ஒத்துழையாமை என்னும் குடையைக் கொண்டு வந்தான் என்னும் முறையில் "இடி மின்னல் காக்கும் குடை செய்தான் என்கோ' என்று குறிப்பிட்டு, "என் சொலிப் புகழ்வதிங்கனையே!" என்று புகழ்ந்து பாராட்டுகிறார். "விடி விலாத் துன்பம் செயும் பராதீன வெம்பிணி அகற்றி டும் வண்ணம் படிமிசைப் புதிதாய்ச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்" என்று காந்தியின் அறப்போர் உத்தியைப் பாராட்டுகிறார். "மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல் இன்ன மெய் ஞானத்துணிவினை மற்றாங்கு இழி படுபோர் கொலை தண்டம் பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் பிணைத்திடத் துணிந்தலை பெருமான்" என்று அறப்போர் அரசியலுக்கு ஒரு புதிய விளக்கம் கொடுத்து பாரதி பாடுகிறார். இவ்வாறு ஒத்துழையாமை நெறியினால் இந்திய விடுதலைக்கு வழி கிடைக்கும் என்று கூறுகிறார். காந்தியின் அறப்போர் வழியைப் பற்றிப் பாரதி கூறும் போது இந்திய