பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி .יוני சீனிவாசன் கொள்கையாகும். அதுவே பாரதி காட்டும் புது நெறியின் அடிநாதமாகும். தன்னைத்தான் ஆளும் தன்மையை ஒருவர் பெற்று விட்டால் எல்லாப் பயன்களும் தாமே எய்தும் என்று பாரதி அழுத்தமாகக் கூறுகிறார். யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய். யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய், வாழ்ந்திட் விரும்பினேன் என்று பாரதி கூறுவது தனக்காக மட்டுமல்ல, நம் அனைவருக்குமாகவாகும். வேண்டாதனைத்தையும் நீக்கிவேண்டியதனைத்தையும் அருள்வது உன் கடனே என்று பாரதி பாரபட்சமும், பாகுபாடும் இல்லாமல் அனைத்துக் கடவுள்களையும் விரும்பி வணங்கி வேண்டிக் கொள்கிறார். அச்சமில்லை அச்சமில்லை என்பது பாரதியின் தாரக மந்திரம். நாட்டின் விடுதலைக்கு மனித சமுதாயத்தின் விடுதலைக்கு முதல் நிபந்தனை அச்சம் நீங்க வேண்டும் என்பதாகும். பாரதி பல இடங்கிளிலும் தனது கவிதைகளில் அச்சம் தீரும், அமுதம் விளையும் என்றும் . அச்சம் இல்லை. அமுங்குதல் இல்லையென்றும், அண்டம் சிதறினாலும் அஞ்சமாட்டோம் என்றும் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் என்றும், ஆசையைக்கொல்வோம். புலையச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் என்றும், அச்சமும் துயரும் இரு அசுரர் என்றும், அஞ்சேல் அஞ்சேல் என்று கூறிப் பாடுகிறார். நமக்கு நல்லாண்மை சமைப்பவனையென்றும், அச்சத்தைச் சுட்டங்குசாம்பருமின்றி அழித்திடும் வானவனையென்றும், ஐயம் தீர்ந்து விடல் வேண்டும். புலையச்சம் போயொழிதல் வேண்டும் என்றும், நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை என்றும், ஐயமும் திகைப்பும் தொலைந்தன. ஆங்கே அச்சமும் தொலைந்து சினமும் பொய்யும் என்றனைய புன்மைகள் எல்லாம் போயினவென்றும், யார்க்கும் குடியல்லேன்யான் என்பதோர்ந்தன, உன்றன்போர்க்கஞ்சுவேனோ, பொடியாக்குவேன் உன்னை மாயையே என்றும் கூறுகிறார். "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, இச்சகத்துள்ளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று தொடங்கி உச்சி மீது வான்இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று முடியும் ஒரு தனிப்பாடலையே பாரதி பாடியுள்ளார். அச்சமில்லையென்றும் அவ்வச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் ஒரு தனியான பாடலை அதற்கென்றே பாடிய தனிப் புலவன் பாரதி தான் என்று கூட கூற முடியும். இன்னும் ஜயமுண்டு பயமில்லை மனமேயென்றும், பயமெனும் பேய்தனையடித்தோம் என்றும், அச்சமும், பேடிமையும் அடிமைச்சிறுமதியும் Տ() உச்சத்திற் கொண்ட ஊமைச்சனங்களடி என அடித்துக் கூறியும் பாரதி பாடுகிறார். எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே என்றும், அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் என்றும், அச்சத்தால் நாடியெலாமவிந்து போகும் என்றும், புதிய ஆத்தி குடியில் குழந்தைகளுக்குப் பாடமாகப் பாடிய ஆத்திசூடியின் முதல் பாடலே அச்சம் தவிர் என்றும், பாதகம் செய்வரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா,மோதி மிதித்துவிடுபாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றும் மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன. கொன்று அவை போக்கென்று நின்னைச் சரண்டைந்தேன் என்றெல்லாம் அச்சத்தைப் போக்கு என்று பாரதி பாரத நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், என்றும், நானும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம். ஞான நல்லறம், வீரசுதந்திரம் பேணு நற்குடிப்பெண்ணின் குணங்களாம் என்றும் பாரதி பெண்ணுரிமை பற்றிய பாடல்களிலும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்பதற்கு தன்னுடைய கவிதைகளில் பாரதி முக்கிய இடம் கொடுத்துள்ளது சிறப்பானதாகும். பாரதியின் புது நெறியில், புதிய விழிப்புணர்வுக்கான அறை கூவலில் அச்சத்தை நீக்குவது, அச்சத்தைப் போக்குவது என்பது அவருடைய அடிப்படை சிந்தாந்தமாகும். தன்னிலை விருப்பம் "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்-இமைப்பொழுதும் சோரா திருத்தல்" இதுவே பாரதியின் விருப்பமும் வேண்டுதலுமாகும். "பண்டைச் சிறுமைகள் போக்கி பழுத்த சுவைத் தண்டமிழ்ப்பாடலொரு கோடி மேவிடச்செய்குவையே! என்பதும் பாரதியின் விருப்பமும் வேண்டுதலுமாகும். "மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி, எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி உடலை இரும்புக்கு இணையாக்கி